விருத்தாசலத்தில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்


விருத்தாசலத்தில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 3 April 2021 5:07 PM GMT (Updated: 3 April 2021 5:07 PM GMT)

விருத்தாசலத்தில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.


விருத்தாசலம், 

கடலூா் மாவட்டம் கம்மாபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பெரியகாப்பான்குளம் ஊராட்சியில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். 

இந்த பகுதியில் உள்ள 2 மேல்நிலை நீர்தேக்க தொட்டியும் கடந்த 7 மாதங்களாக பழுதடைந்து இருப்பதால், கிராமத்தில் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டது. இதுபற்றி அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.

இந்த நிலையில் விருத்தாசலத்தில் சப்-கலெக்டர் பிரவீன்குமாரை நேற்று சந்தித்து புகார் தெரிவித்துள்ளனர். அவர், தேர்தல் முடிந்த பின் குடிநீர் தட்டுப்பாட்டை சரிசெய்து தருவதாக கூறியுள்ளார். 

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சப்-கலெக்டர் அலுவலகம் முன்பு காலிக்குடங்களுடன் அமர்ந்து திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த விருத்தாசலம் துணை போலீஸ் சூப்பிரண்டு மோகன் தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, நடவடிக்கை எடுப்பதாக உறதியளித்தனர்.இதையடுத்து அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Next Story