திருத்தங்கலில் விழிப்புணர்வு பிரசாரம்


திருத்தங்கலில் விழிப்புணர்வு பிரசாரம்
x
தினத்தந்தி 3 April 2021 7:53 PM GMT (Updated: 3 April 2021 7:53 PM GMT)

100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி திருத்தங்கலில் விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது.

சிவகாசி, 
சட்டமன்ற தேர்தலில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளிலும் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி மாவட்ட நிர்வாகம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. இந்தநிலையில் சிவகாசி ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் சார்பில் திருத்தங்கல் புதிய பஸ் நிலையத்தில் பிரமாண்ட கோலங்கள் வரையப்பட்டு பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கலெக்டர் கண்ணன் கோலங்களை வரைந்த சுயஉதவிக்குழு பெண்களை பாராட்டினார். பின்னர் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி உறுதிமொழி எடுக்கப்பட்டது. முன்னதாக திருத்தங்கலில் இருந்து சிவகாசி நகராட்சி எல்லை வரை விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. இதில் நகராட்சி தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர். பேரணியின் முன்னால் தப்பாட்டம், கும்மியாட்டம், சுருள்வாள், சிலம்பாட்டம் ஆகியவை ஆடியபடி சிறுவர்கள் வந்தனர். 
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மங்களராமசுப்பிரமணியயன், திட்ட இயக்குனர் ஜெயக்குமார், உதவி இயக்குனர் கணேசன், திருத்தங்கல் நகராட்சி ஆணையாளர் பாண்டித்தாய், சிவகாசி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜ்மோகன், ராமராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story