தேர்தலையொட்டி 3 நாட்களுக்கு விடுமுறை டாஸ்மாக் கடைகளில் அலைமோதிய கூட்டம்


தேர்தலையொட்டி 3 நாட்களுக்கு விடுமுறை டாஸ்மாக் கடைகளில் அலைமோதிய கூட்டம்
x
தினத்தந்தி 3 April 2021 10:49 PM GMT (Updated: 3 April 2021 10:49 PM GMT)

தேர்தலையொட்டி 3 நாட்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால், டாஸ்மாக் கடைகளில் மதுவாங்க கூட்டம் அலைமோதியது.

தேர்தலையொட்டி 3 நாட்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால், டாஸ்மாக் கடைகளில் மதுவாங்க கூட்டம் அலைமோதியது.
3 நாட்கள் விடுமுறை
தமிழக சட்டமன்ற தேர்தல் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது. இந்த தேர்தலையொட்டி இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள், தனியார் மதுபான விடுதிகள் போன்றவற்றுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. எனவே 3 நாட்களுக்கு மதுபானங்கள் கிடைக்காததால், டாஸ்மாக் கடைகளில் நேற்று மதுபிரியர்கள் குவிந்தார்கள். மாலை வரை வழக்கமான மது விற்பனை நடந்து வந்தது. இரவு 8 மணிக்கு பிறகு அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் மதுபிரியர்களின் கூட்டம் அலைமோதியது.
நீண்ட வரிசை
ஈரோடு பஸ் நிலையம் பகுதி, திருநகர் காலனி, சூரம்பட்டி, குமலன்குட்டை உள்பட ஈரோடு பகுதியில் உள்ள பெரும்பாலான டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அதிகமாக இருந்தது. இதனால் மதுபிரியர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மதுபானங்களை வாங்கினார்கள். ஒருசில கடைகளில் முந்தியடித்து கொண்டு மதுபாட்டில்கள் வாங்கிய காட்சியை காணமுடிந்தது.
தொடர் விடுமுறை காரணமாக சிலர் மொத்தமாக மதுபானங்களை வாங்கி சென்றதையும் காண முடிந்தது. சிலர் தங்களுக்கு விருப்பமான மதுபானங்களை வாங்குவதற்காக பல்வேறு கடைகளுக்கு தேடி அலைந்து சென்றார்கள். இதனால் மது விற்பனையும் சூடுபிடித்தது.

Next Story