விவசாயியே முதல்-அமைச்சர் என்பதால் நீர் மேலாண்மையில் புரட்சி செய்திருக்கிறது அ.தி.மு.க. அரசு மணப்பாறை தொகுதி வேட்பாளர் ஆர்.சந்திரசேகர் பேச்சு


விவசாயியே முதல்-அமைச்சர் என்பதால் நீர் மேலாண்மையில் புரட்சி செய்திருக்கிறது அ.தி.மு.க. அரசு மணப்பாறை தொகுதி வேட்பாளர் ஆர்.சந்திரசேகர் பேச்சு
x
தினத்தந்தி 4 April 2021 3:30 AM GMT (Updated: 4 April 2021 3:21 AM GMT)

விவசாயியே முதல்-அமைச்சர் என்பதால் நீர் மேலாண்மையில் புரட்சி செய்திருக்கிறது அ.தி.மு.க. அரசு மணப்பாறை தொகுதி வேட்பாளர் ஆர்.சந்திரசேகர் பேச்சு.

மணப்பாறை, 

திருச்சி மாவட்டம், மணப்பாறை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஆர்.சந்திரசேகர் நேற்று மணப்பாறை ஒன்றியத்தில் இறுதிகட்ட தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்து பேசியதாவது:-

ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்தவர் தான் விவசாயம் செய்து வந்தவர் தான் இன்றைய தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி. ஆகவே தான் விவசாயிகள் வங்கியில் வாங்கிய பயிர் கடனை தள்ளுபடி செய்தார். கூட்டுறவு வங்கியில் வைக்கப்பட்டுள்ள 6 பவுன் நகை வரை கடன் தள்ளுபடி செய்திருக்கிறார்கள். இதுமட்டுமல்ல நீர் மேலாண்மையை மேம்படுத்திடும் வகையில் ஆறுகளில் தடுப்பணைகள், குளங்கள் தூர்வாரப்பட்டுள்ளது. நிலத்தடி நீரை உயர்த்துவதற்கான அனைத்து நீர்மேலாண்மை திட்டங்களையும் சிறப்பாக செய்து நீர் மேலாண்மையில் புரட்சி செய்திருக்கிறது அ.தி.மு.க. அரசு. இதே போல் மகளிர் நலன் என்று எடுத்துக் கொண்டால் மகளிர் சுயஉதவிக்குழு வாங்கிய கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கின்றது. இதுபோன்ற எண்ணற்ற திட்டங்கள் தமிழகத்தில் செயல்படுத்தினாலும் கூட இன்னும் ஏராளமான வாக்குறுதிகளையும் முதல்-அமைச்சர் அறிவித்திருக்கிறார். ஆகவே மக்கள் நாளை மறுதினம் நடைபெற உள்ள தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து மகத்தான வெற்றியை தர வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story