துறையூர் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள் தி.மு.க. வேட்பாளர் ஸ்டாலின் குமார் தீவிர பிரசாரம்


துறையூர் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள் தி.மு.க. வேட்பாளர் ஸ்டாலின் குமார் தீவிர பிரசாரம்
x
தினத்தந்தி 4 April 2021 4:00 AM GMT (Updated: 4 April 2021 3:54 AM GMT)

துறையூர் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள் தி.மு.க. வேட்பாளர் ஸ்டாலின் குமார் தீவிர பிரசாரம்.

துறையூர், 

துறையூர் தனி தொகுதியில் தி.மு.க. சார்பில் ஸ்டாலின்குமார் எம்.எல்.ஏ. மீண்டும் போட்டியிடுகிறார். அவர், துறையூரை சுற்றியுள்ள கிராமங்கள், பச்சைமலை, உப்பிலியபுரம் பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பை முடித்துக்கொண்டு, துறையூர் நகர் பகுதியில் நேற்று மேட்டுத்தெரு, பாரதி அரங்கம், ஆத்தூர் ரோடு, தெப்பக்குளம், வடக்குத்தெரு, கீழ கடைவீதி, கட்டபொம்மன் தெரு, சிக்க பிள்ளையார் கோவில் தெரு, அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் தெரு, மார்க்கெட் ரோடு, பண்டரிநாதன் தெரு, குட்டகரை, குட்ட கரைமேடு, காமராஜர் நகர் எக்ஸ்டென்ஷன், பாலக்கரை, கடைவீதி, முத்தையா காலனி, ஆஸ்பத்திரி ரோடு, புது காட்டு தெரு, விநாயகர் தெரு, சொரத்தூர் ரோடு, நெசவாளர் காலனி உள்பட துறையூர் நகராட்சியில் உள்ள 24 வார்டுகளிலும் தீவிர சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரித்தார். அப்போது அவர் செல்லும் இடங்களில் எல்லாம் அவருக்கு பூரண கும்ப மரியாதை வழங்கியும், ஆராத்தி எடுத்தும், பரிவட்டம் கட்டியும் பெண்கள் வரவேற்றார்கள்.

பொதுமக்கள் மத்தியில் அவர் பேசியபோது, தலைவர் ஸ்டாலின் மக்களின் நலனில் எப்போதும் அக்கறை கொண்டவர். மக்களின் நலனை மனதில் கொண்டு முத்தான தேர்தல் அறிக்கையை அறிவித்துள்ளார். குடும்பத்தலைவிகள் நலனில் அக்கறை கொண்டு உரிமை தொகையாக ரூ.1,000 வழங்கப்படும். ஏழை, எளிய விவசாயிகளின் விவசாய கடன் ரத்து செய்யப்படும், மாணவ-மாணவிகள் பெற்ற கல்விக்கடன் ரத்து செய்யப்படும் என்று அறிவித்துள்ளார். தற்போது பெட்ரோல், டீசல், பால் விலை கட்டுக்கடங்காமல் அதிகரித்து கொண்டே உள்ளது. அவற்றின் விலையையும் குறைப்பதாக அறிவித்துள்ளார். இத்தகைய நலத்திட்டங்களை தங்களுக்கு பெற்று கொடுக்க மீண்டும் என்னை உங்களின் ஒருவனாகவும், உங்கள் வீட்டுப் பிள்ளையாகவும், பணியாற்ற மீண்டும் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து, என்னை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுங்கள் என்றார்.

பிரசாரத்தின் போது, மாவட்ட ஊராட்சி தலைவர் தர்மன் ராஜேந்திரன், நகர செயலாளர் மெடிக்கல் முரளி, ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை, இளைஞரணி அமைப்பாளர் கிட்டப்பா, மாவட்ட பிரதிநிதிகள் மதியழகன், கார்த்திகேயன், மாவட்ட வர்த்தக அணி திருமூர்த்தி, ஆதிதிராவிடர் நலக்குழு மகாலிங்கம், முன்னாள் நகரமன்ற உறுப்பினர் ராஜேஸ்வரி சேகர் உள்பட தொண்டர்கள் நிர்வாகிகள் பலர் திரளாக கலந்து கொண்டார்கள்.

Next Story