மாவட்ட செய்திகள்

மானூர் அருகேகிணற்றில் தவறி விழுந்து மூதாட்டி சாவு + "||" + Grandmother dies after falling into well

மானூர் அருகேகிணற்றில் தவறி விழுந்து மூதாட்டி சாவு

மானூர் அருகேகிணற்றில் தவறி விழுந்து மூதாட்டி சாவு
மானூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து மூதாட்டி பரிதாபமாக இறந்தார்.
மானூர்:

மானூர் அருகே உள்ள மதவக்குறிச்சி கிராமம் வெங்கல பொட்டலை சேர்ந்தவர் புதியமுத்து. இவர் கயத்தாறு அருகே உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். அவருடைய மனைவி மாலதி (வயது 65).  இவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் திடீரென்று மாலதியை காணவில்லை. ஊருக்கு வடபுறம் உள்ள கிணற்றில் மாலதி பிணமாக மிதந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த மானூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர்.

மேலும் கங்கைகொண்டானில் இருந்து தீயணைப்பு துறையினரும் வந்து மாலதி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து மானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், மாலதி மனநிலை பாதிக்கப்பட்டு கிணற்றில் தவறி விழுந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் மேலும் விசாரணை நடத்தினர்.

தொடர்புடைய செய்திகள்

1. கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி சாவு
பாவூர்சத்திரம் அருகே கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி இறந்தார்.
2. கிணற்றில் தவறி விழுந்து வாலிபர் சாவு
குலசேகரன்பட்டினத்தில் கிணற்றில் தவறி விழுந்து வாலிபர் இறந்தார்.
3. பனவடலிசத்திரம் அருகே கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் சாவு
பனவடலிசத்திரம் அருகே கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் பரிதாபமாக இறந்தான்.
4. கிணற்றில் தவறி விழுந்து முதியவர் சாவு
சிவகிரி அருகே கிணற்றில் தவறி விழுந்து முதியவர் இறந்தார்.