100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி அழைப்பிதழ்


100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி அழைப்பிதழ்
x
தினத்தந்தி 4 April 2021 8:33 PM GMT (Updated: 2021-04-05T02:03:25+05:30)

பெரம்பலூர் மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி வீடு, வீடாக இளைஞர்கள் அழைப்பிதழ் வழங்கினர்.

பெரம்பலூர்:
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெறவுள்ளது. இதில் பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் (தனி), குன்னம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தும் விதமாக திருமண அழைப்பிதழ் போல் தேர்தல் திருவிழா அழைப்பிதழை பெரம்பலூர் இளைஞர்கள் இயக்கத்தினர் அச்சடித்து, அதனை தாம்பூல தட்டில் வெற்றிலை பாக்குடன் வைத்து வீடு, வீடாக சென்று வாக்காளர்களிடம் வழங்கி வருகின்றனர். மேலும் அந்த அழைப்பிதழில் தவறாமல் வாக்களிக்க வேண்டும், வாக்குப்பதிவு நாள் மற்றும் வாக்குப்பதிவு தொடங்கும் நேரம், முடிவடையும் நேரம், வாக்காளர்கள் வாக்கிற்கு பணம் மற்றும் பரிசுப்பொருள் வாங்கக்கூடாது, வாக்குச்சாவடிக்கு செல்லும்போது வாக்காளர் அடையாள அட்டை கொண்டு செல்ல வேண்டும் என்பது உள்ளிட்ட வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.

Next Story