சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.402-க்கு ஏலம்


சத்தியமங்கலம் மார்க்கெட்டில்  மல்லிகைப்பூ கிலோ ரூ.402-க்கு ஏலம்
x
தினத்தந்தி 4 April 2021 8:48 PM GMT (Updated: 4 April 2021 8:48 PM GMT)

சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.402-க்கு ஏலம் போனது.

சத்தியமங்கலம்
சத்தியமங்கலம் கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் உள்ளது. இந்த மார்க்கெட்டில் நேற்று பூக்கள் ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் 4 டன் பூக்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.
நேற்று நடந்த ஏலத்தில் மல்லிகைப்பூ கிலோ ஒன்று ரூ.402-க்கும், முல்லை ரூ.360-க்கும், காக்கடா ரூ.175-க்கும், செண்டுமல்லி ரூ.20-க்கும், பட்டுப்பூ ரூ.110-க்கும், ஜாதிமல்லி ரூ.500-க்கும், கனகாம்பரம் ரூ.250-க்கும், சம்பங்கி ரூ.30-க்கும், அரளி ரூ.60-க்கும், துளசி ரூ.40-க்கும், செவ்வந்தி ரூ.100-க்கும் ஏலம் போனது.

Next Story