ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் 41 பேருக்கு கொரோனா பாதிப்பு


ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் 41 பேருக்கு கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 4 April 2021 9:39 PM GMT (Updated: 4 April 2021 9:39 PM GMT)

ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் 41 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் 41 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.
கொரோனா தொற்று
கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. ஈரோடு மாவட்டத்தில் 2-வது அலையாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. சட்டமன்ற தேர்தலுக்கான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் சூழ்நிலையிலும், கொரோனா தொற்று பரவுவதை தடுக்கும் நடவடிக்கையும் சுகாதாரத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி ஈரோடு மாவட்டத்தில் எந்தெந்த பகுதிகளில் கொரோனா தொற்று புதிதாக ஏற்பட்டு வருகிறது, வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்கள், அவர்களை தனிமைப்படுத்துதல் என கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும், புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் கிருமி நாசினி தெளித்தல் உள்ளிட்ட நோய் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
41 பேர்
இந்தநிலையில் ஈரோடு மாவட்டத்தில் நேற்று புதிதாக 41 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 15 ஆயிரத்து 501 ஆக உயர்ந்தது.
அதில் 15 ஆயிரத்து 102 பேர் குணமடைந்தார்கள். நேற்று மட்டும் 14 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு உள்ளனர். இதுவரை 249 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மொத்தம் 150 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

Next Story