ஏரிப்பட்டி மதுரைவீரன் கோவில் திருவிழா


ஏரிப்பட்டி மதுரைவீரன் கோவில் திருவிழா
x
தினத்தந்தி 4 April 2021 11:33 PM GMT (Updated: 4 April 2021 11:34 PM GMT)

ஏரிப்பட்டி மதுரைவீரன் கோவில் திருவிழா.

பொள்ளாச்சி,

பொள்ளாச்சி அருகே ஏரிப்பட்டி கிராமத்தில் மதுரைவீரன், ஸ்ரீ பட்டதரசி அம்மன் கோவில் உள்ளது. 

இந்த கோவில் திருவிழாவையொட்டி சேத்துமடை குல தெய்வ காளியம்மன் கோவிலுக்கு தீர்த்தம் எடுக்க புறப்படுதல், சாமி கண் திறப்பு, சக்தி கும்பம் எடுத்து கங்கை புறப்படுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது. 

இதை தொடர்ந்து மதுரை வீரன், வெள்ளையம்மாள், பொம்மியம்மாள் சுவாமிக்கு திருக்கல்யாணம் பக்தர்கள் திரள சிறப்பாக நடந்தது. 

பின்னர், பூவோடு எடுத்தல், சாமி உருவாரம் எடுத்தல், தீபாராதனை, மகா பூஜை, காட்டு பொங்கல் நடந்தது. 

தொடர்ந்து சாமிக்கு மஞ்சள் நீராடுதல், அபிஷேக ஆராதனை, முனீஸ்வரனுக்கு பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைந்தது.

 இதில் பொதுமக்கள் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளி கடைப்பிடித்து சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர்
 செய்து இருந்தனர்


Next Story