திருட்டுத்தனமாக மதுவிற்ற 4 பேர் கைது


திருட்டுத்தனமாக மதுவிற்ற 4 பேர் கைது
x
தினத்தந்தி 5 April 2021 5:46 AM GMT (Updated: 5 April 2021 5:46 AM GMT)

திருட்டுத்தனமாக மதுவிற்ற 4 பேர் கைது.

திருவள்ளூர், 

தமிழக சட்டமன்ற தேர்தல் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது. இந்த நிலையில் திருவள்ளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு துரைப்பாண்டியன் தலைமையில் இன்ஸ்பெக்டர் கன்னியப்பன் மற்றும் போலீசார் திருவள்ளூர் அடுத்த கீழச்சேரி அருகே ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு மப்பேடு கிராமம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த வேலு (வயது 39), கீழச்சேரி மாதா கோவில் தெருவை சேர்ந்த அந்தோணிராஜ் (36), இன்னாசி ஆகியோர் திருட்டுத்தனமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்றது தெரியவந்தது. இதை தொடர்ந்து போலீசார் விரைந்து சென்று அங்கிருந்த வேலு, அந்தோணிராஜ் ஆகியோரை கைது செய்தனர். இன்னாச்சி தப்பி ஓடிவிட்டார். பிடிபட்ட அவர்களிடம் இருந்து 550 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

அதேபோல தொடுகாடு பஞ்சமந் தாங்கல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது தொடுகாடு பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் 74 மது பாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்றது தெரியவந்தது. போலீசார் மதுபாட்டில்களை கைப்பற்றி அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

கும்மிடிப்பூண்டி சிப்காட் அடுத்த கங்கன்தொட்டி பகுதியில் வீட்டில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து வடமாநில தொழிலாளர்களுக்கு விற்பனை செய்வதாக இந்திராணி (வயது48) என்ற பெண் மீது கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 40 மதுபாட்டில்களை போலீசார் கைப்பற்றினர்.

Next Story