பெயர் பட்டியலில் தே.மு.தி.க. வேட்பாளரின் இனிசியல் மாற்றி அச்சடிப்பு அதிகாரிகள் அலட்சியம் என குற்றச்சாட்டு


பெயர் பட்டியலில் தே.மு.தி.க. வேட்பாளரின் இனிசியல் மாற்றி அச்சடிப்பு அதிகாரிகள் அலட்சியம் என குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 5 April 2021 5:16 PM GMT (Updated: 5 April 2021 5:16 PM GMT)

பெயர் பட்டியலில் தே.மு.தி.க. வேட்பாளரின் இனிசியல் மாற்றி அச்சடிப்பு அதிகாரிகள் அலட்சியம் என குற்றச்சாட்டு

திருக்கோவிலூர்

திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர் மற்றும் அவர்களின் சின்னத்துடன் கூடிய பட்டியல் வாக்குச்சாவடி மையங்களின் முன்பு ஒட்டி வைக்கப்பட்டது. இதில் தே.மு.தி.க. வேட்பாளர் எல் வெங்கடேசனின் பெயர் எஸ்.வெங்கடேசன் என்று இனிசியல் தவறாக அச்சிடப்பட்டிருந்ததை பார்த்த தே.மு.தி.க.வினர் வாக்குச்சாவடி மையங்களில் இருந்த தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் தட்டிக்கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

பின்னர் இதுபற்றிய தகவல் அறிந்து திருக்கோவிலூர் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சிவசங்கரன் வருவாய்த்துறை ஊழியர்கள் மூலம் எஸ் என தவதறாக அச்சிடப்பட்ட இனிசியலை எல் என திருத்தம் செய்து ஒட்டுமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், இந்த பணி இன்று இரவே முடிந்துவிடும் என தெரிவித்தார். இதுகுறித்து தே.மு.தி.க.வினர் கூறுகையில், எங்கள் கட்சியின் வேட்பாளரின் வெற்றியை தடுக்கும் பொருட்டு யாருடைய தூண்டுதலின் பேரிலோ இதுபோன்ற செயலில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளார் என கூறினர். தே.மு.தி.க. வேட்பாளரின் பெயரில் உள்ள இன்சியல் மாற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story