தொழிலாளர்கள் புகார் தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை


தொழிலாளர்கள் புகார் தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை
x
தினத்தந்தி 5 April 2021 6:58 PM GMT (Updated: 5 April 2021 6:58 PM GMT)

சிவகங்கையில் சட்டமன்ற தேர்தலுக்கு விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் குறித்து தொழிலாளர்கள் புகார் தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு உள்ளது.

சிவகங்கை, 

சிவகங்கை மாவட்ட தொழிலாளர் உதவி கமிஷனர் (பொறுப்பு) ராஜ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சட்டசபைத்தேர்தல் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. அதனை தொடர்ந்து, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் படி, தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வசதியாக அனைத்து தொழில்நிறுவனங்கள், கடைகள், வணிக நிறுவனங்கள், ஓட்டல்கள், கட்டுமான நிறுவனங்கள் ஆகியன தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் விடுமுறை வழங்க வேண்டும். விடுமுறை வழங்காத நிறுவனங்கள் மீது தொழிலாளர் சட்டத்தின்படி, குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கிடையே, சிவகங்கை மாவட்டத்தில் விடுமுறை வழங்காத நிறுவனங்கள் மீது புகார் அளிக்க வசதியாக கலெக்டர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து புகார் தெரிவிப்பவர்கள், 04575240521,9442418361,9865893585,9025602961 ஆகிய எண்களில் புகார் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story