காதர்பேட்டையில் கடைகள் அடைப்பு


காதர்பேட்டையில் கடைகள் அடைப்பு
x
தினத்தந்தி 6 April 2021 7:26 PM GMT (Updated: 6 April 2021 7:26 PM GMT)

சட்டமன்ற தேர்தலையொட்டி காதர் பேட்டையில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

திருப்பூர்
சட்டமன்ற தேர்தலையொட்டி  காதர் பேட்டையில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
வாக்குப்பதிவு  
திருப்பூரில் ஆடை விற்பனைக்கு பெயர் பெற்றது காதர்பேட்டை ஆகும். இங்கு ஏராளமான சில்லரை மற்றும் மொத்த ஆடை விற்பனை கடைகள் உள்ளன. சட்டமன்ற தேர்தலையொட்டி இந்த கடைகள் நேற்று அடைக்கப்பட்டிருந்தன. இதன் காரணமாக ஆடை விற்பனை நேற்று நடைபெறவில்லை. விற்பனை நடைபெறாததால் காதர்பேட்டை பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.
தேர்தலையொட்டி திருப்பூரில் உள்ள பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. வெளிமாவட்ட தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு சென்றனர். குடும்பத்துடன் திருப்பூரில் வசிக்கும் தொழிலாளர்கள் வாக்களித்து விட்டு வீடுகளில் இருந்தனர். 
கடைகள் அடைப்பு 
பின்னர் இந்த தொழிலாளர்கள் பலரும் ஆடைகள் வாங்க, காதர்பேட்டைக்கு வந்தனர். ஆனால் அங்கு கடைகள் அடைக்கப்பட்டிருந்ததால் ஏமாற்றத்துடன் வீடுகளுக்கு திரும்பி சென்றனர்.

Next Story