மாவட்ட செய்திகள்

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளிலும் விறுவிறுப்பான வாக்குப்பதிவு + "||" + Voter turnout in all 4 constituencies in Sivagangai district

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளிலும் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளிலும் விறுவிறுப்பான வாக்குப்பதிவு
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளிலும் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடந்தது
மானாமதுரை
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளிலும் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடந்தது.
சிவகங்கை
சிவகங்கை பகுதியில் நேற்று காலை 7 மணி முதல் விறுவிறுப்பான வாக்குப்பதிவு தொடங்கியது. சிவகங்கை மருதுபாண்டியர் நகர் மேல்நிலைப்பள்ளியில் அமைந்துள்ள 4 வாக்குச்சாவடிகளில் காலை 7 மணி முதலே ஏராளமான பொதுமக்கள் வரிசையில் நின்று வாக்களித்தனர். அங்கு இருந்த சக்கர நாற்காலியை மாற்றுத்திறனாளிகளும், முதியவர்களும் பயன்படுத்தி ஓட்டு போட்டனர். அமைச்சர் பாஸ்கரன் சிவகங்கையை அடுத்த தமராக்கியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி சிவகங்கை மருதுபாண்டிய நகரில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் தனது மனைவியுடன் சென்று வரிசையில் நின்று ஓட்டு போட்டனர்.
சிவகங்கை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் செந்தில்நாதன் தேவகோட்டை அடுத்த நாகாடியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் வாக்கை செலுத்தினார். இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளர் குணசேகரன் மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரியில் வாக்களித்தார். நாம்தமிழர் கட்சி வேட்பாளர் மல்லிகா ரமேஷ் தேவகோட்டை முப்பையூரை அடுத்த புள்ளியேந்தல் கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். மக்கள் நீதி மய்யம் ஜோசப் திருப்பத்தூரில் இளங்குடியில் வாக்களித்தார். 
சிவகங்கை தொகுதி அ.ம.மு.க. வேட்பாளர் அன்பரசன் சிவகங்கையை அடுத்த அரசனூரிலுள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை செலுத்தினார்.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் கே.ஆர். பெரியகருப்பன் எம்.எல்.ஏ. அவரது சொந்த ஊரான அரளிக்கோட்டையில் வாக்கினை பதிவு செய்தார். மேலும் அவரது தாயார் கருப்பாயி அம்மாள் (வயது 90) மற்றும் குடும்பத்தினர் சேர்ந்து வந்து வாக்கு பதிவு செய்தனர்.
அ.தி.மு.க. வேட்பாளர் மருது அழகுராஜ் காட்டாம்பூர் அரசு பள்ளியில் வாக்களித்தார். அ.ம.மு.க. வேட்பாளர் முன்னாள் எம்.எல்.ஏ. கே.கே. உமாதேவன் கம்பனூர் அரசு பள்ளியில் வாக்களித்தார்.
மானாமதுரை
மானாமதுரை சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் நாகராஜன் தனது சொந்த ஊரான கீழநெட்டூர் கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார். அவர் பொதுமக்களுடன் வரிசையில் நின்று தனது வாக்கினை பதிவு செய்தார். அ.ம.மு.க. வேட்பாளர் மாரியப்பன் கென்னடி ஆதனூர் சாலையில் உள்ள தனியார் பள்ளியில் வாக்களித்தார். தி.மு.க. வேட்பாளர் தமிழரசி மதுரை மாவட்டத்தில் தனது வாக்கை பதிவு செய்தார்.
காரைக்குடி
காரைக்குடி தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் எச்.ராஜா மகரிஷி வித்யாமந்திர் மெட்ரிக் மழலையர் பள்ளியில் வாக்கு அளித்தார். இதேபோல் காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடி காரைக்குடி அழகப்பா ஆசிரியர் பயிற்சி பள்ளியில் வாக்களித்தார். அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் தேர்போகி பாண்டி கண்ணங்குடி ஒன்றியம் கிளாமலை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வாக்களித்தார். மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் ராசகுமார் காரைக்குடி ஆலங்குடி யார் வீதியிலுள்ள அரசு பள்ளியில் வாக்களித்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. செய்யூர், மதுராந்தகம் தொகுதி வாக்குஎந்திரங்கள் வைக்கப்பட்ட மையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் தர்ணா
செய்யூர், மதுராந்தகம் தொகுதிக்குட்பட்ட வாக்குஎந்திரங்கள் வைக்கப்பட்ட மையத்தில் இணையசேவை வழங்கப்பட்டுள்ளதால் முறைகேடு நடக்க வாய்ப்பு இருப்பதாக கூறி செய்யூர் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
2. முதியவரை ஏமாற்றி வாக்குப்பதிவு செய்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை
முதியவரை ஏமாற்றி வாக்குப்பதிவு செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக அதிகாரியிடம் வேட்பாளர் புகார் அளித்ததை தொடர்ந்து, அந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
3. வாக்குப்பதிவு சதவீதத்தில் பாலக்கோடு முதலிடம்; வில்லிவாக்கத்துக்கு கடைசி இடம்
தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு 6-ந்தேதி நடைபெற்றது. அதில் 72.78 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக பாலக்கோடு தொகுதியில் 87.33 சதவீதமும், குறைந்தபட்சமாக வில்லிவாக்கத்தில் 55.52 சதவீதமும் பதிவாகியுள்ளன.
4. ஆண்களை விட பெண்கள் அதிகளவில் வாக்களிப்பு
ராமநாதபுரம் மாவட்டத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 4 தொகுதிகளிலும் 69.60 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. இந்த தேர்தலில் ஆண்களை விட பெண்களே அதிகளவில் வாக்களித்துள்ளனர்.
5. 7 தொகுதிகளிலும் பெண்கள் வாக்குப்பதிவு அதிகம்
மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளிலும் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் தான் கூடுதலாக வாக்குப்பதிவு செய்துள்ளனர்.