மாவட்ட செய்திகள்

அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் + "||" + AIADMK will form the government again

அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கும்

அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கும்
அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கும்
கோவை

அ.தி.மு.க. மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று ஓட்டு போட்ட பிறகு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்.

அமைச்சர் ஓட்டு போட்டார்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சுகுணாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தனது மனைவி வித்யா தேவியுடன் நேற்று காலை 8 மணிக்கு ஓட்டுப் போட்டார். பின்னர் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நிருபர்களிடம் கூறியதாவது

ஆட்சி அமைக்கும்

அனைத்து இடங்களிலும் மக்கள் எழுச்சியை பார்க்க முடிகிறது. அதை பார்க்கும் போது அ.தி.மு.க. வெற்றி பெறும். நாங்கள் தேர்தல் விதிமுறைகளை எங்கும் மீறவில்லை. விதிகளுக்கு உட்பட்டே செயல்பட்டோம். 

தகுதி நீக்கம் செய்ய வேண்டுமானால் அமைச்சர் ஜெயக்குமார் கூறியது போல, மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்ட 5 தொகுதிகளின் வேட்பாளர்களை தான் தகுதி நீக்கம் செய்ய வேண்டும். தோல்வி பயத்தில் தி.மு.க.வினர் இப்படி பேசுகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்