மாவட்ட செய்திகள்

பெண்கள் மட்டும் பணிபுரிந்த வாக்குச்சாவடிகள் + "||" + Polls where only women worked

பெண்கள் மட்டும் பணிபுரிந்த வாக்குச்சாவடிகள்

பெண்கள் மட்டும் பணிபுரிந்த வாக்குச்சாவடிகள்
பெண்கள் மட்டும் பணிபுரிந்த வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.
பொள்ளாச்சி

பெண்கள் மட்டும் பணிபுரியும் வகையில் பொள்ளாச்சி தொகுதியில் பாலகோபாலபுரம் நகராட்சி பள்ளி வாக்குச்சாவடியும், ஆனைமலை வி.ஆர்.டி.பெண்கள் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியிலும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டு இருந்தன. 

பெண்கள் மட்டும் பணிபுரிந்தாலும் ஆண், பெண் வாக்காளர்கள் வாக்களித்தனர். மேலும் பொள்ளாச்சி தொகுதியில் மகாலிங்கபுரத்தில் உள்ள சமத்தூர் ராமஐய்யங்கார் நகராட்சி மேல்நிலைப்பள்ளியும், வால்பாறை தொகுதிக்கு பில் சின்னாம்பாளையத்தில் உள்ள அரசு பள்ளியில் அமைக்கப்பட்டு உள்ள வாக்குச்சாவடிகள் மாதிரி வாக்குச்சாவடிகளாக அமைக்கப்பட்டு இருந்தன. 

இந்த வாக்குச்சாவடிகளில் வாக்களிக்க வரும் வாக்களார்களை வரவேற்கும் விதமாக சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டு, அனைத்து மேஜைகளிலும் அலங்கார துணிகள் போடப்பட்டு இருந்தன. 

மேலும் வாக்காளர்கள் நடந்து வரும் பகுதியின் இருபுறமும் பூச்செடிகள் வைக்கப்பட்டன. இதற்கிடையில் வாக்காளர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை நிவர்த்தி செய்வதற்கு வரவேற்பு மையம் அமைக்கப்பட்டு இருந்தது.