குடிசை மாற்று வாரிய குடியிருப்பை சேர்ந்த 3 ஆயிரம் பேருக்கு வாக்களிக்க அனுமதி மறுப்பு


குடிசை மாற்று வாரிய குடியிருப்பை சேர்ந்த 3 ஆயிரம் பேருக்கு வாக்களிக்க அனுமதி மறுப்பு
x
தினத்தந்தி 7 April 2021 4:20 AM GMT (Updated: 7 April 2021 4:20 AM GMT)

வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம்: குடிசை மாற்று வாரிய குடியிருப்பை சேர்ந்த 3 ஆயிரம் பேருக்கு வாக்களிக்க அனுமதி மறுப்பு.

திரு.வி.க.நகர், 

சென்னை அம்பத்தூர் அத்திப்பட்டு ஐ.சி.எப். காலனியில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இதில் சுமார் 2 ஆயிரத்து 800 பேர் வசித்து வருகின்றனர். இவர்கள் வில்லிவாக்கம் கக்கன்ஜி நகர் பகுதியில் இருந்து இங்கு குடியமர்த்தப்பட்டனர்.

இந்த நிலையில், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களித்த தங்களுக்கு, தற்போது பெயர் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறி அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் அவர்கள் குடியிருப்பு வளாகத்தில் போராட்டம் நடத்தினர்.

அதேபோல், கொரட்டூர் அடுத்த பாடிகுப்பம் அண்ணா தெரு, வ.உ.சி தெரு, அங்காளம்மன் கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரம் வசித்து வந்த சுமார் 200 குடும்பங்கள் குடிசை மாற்று வாரியத்தால் கடந்த நவம்பர் மாதம் படப்பையில் உள்ள குடிசை மாற்று வாரியம் அடுக்குமாடி குடியிருப்புக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்நிலையில் அங்கு சென்றவர்களில் சுமார் 300 பேர் நேற்று காலை ஓட்டு போடுவதற்கு படப்பையில் இருந்து பாடி குப்பம் சென்னை மாநகராட்சி நடுநிலைப்பள்ளிக்கு வந்தனர். அங்கு வாக்காளர் பட்டியலில் அவர்கள் பெயர் நீக்கம் செய்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். 

Next Story