மாவட்ட செய்திகள்

வாக்குப்பதிவு எந்திர பட்டனை அழுத்தினால் அனைத்து சின்னத்திலும் விளக்குகள் எரிந்ததால் பரபரப்பு + "||" + Excitement as the lights on all the symbols lit up when the voting machine button was pressed

வாக்குப்பதிவு எந்திர பட்டனை அழுத்தினால் அனைத்து சின்னத்திலும் விளக்குகள் எரிந்ததால் பரபரப்பு

வாக்குப்பதிவு எந்திர பட்டனை அழுத்தினால் அனைத்து சின்னத்திலும் விளக்குகள் எரிந்ததால் பரபரப்பு
வாக்குப்பதிவு எந்திர பட்டனை அழுத்தினால் அனைத்து சின்னத்திலும் விளக்குகள் எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் 1 மணி நேரம் வாக்குப்பதிவு நிறுத்திவைக்கப்பட்டது.
சென்னை,

தமிழக சட்டமன்ற தேர்தல் நேற்று நடைபெற்றது. திருவள்ளூரை அடுத்த தொட்டிக்கலை ஊராட்சியில் உள்ள அரசு பள்ளியில் வாக்குப்பதிவு மையம் அமைக்கப்பட்டிருந்தது. காலை 7 மணி அளவில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் வாக்களிக்க காத்திருந்தனர்.

அப்போது ஒரு வாக்காளர் தனது வாக்கை பதிவு செய்வதற்காக வாக்குப்பதிவு எந்திரத்தில் இருந்த பட்டனை அழுத்திய போது அதில் இருந்த அனைத்து சின்னத்திலும் விளக்குகள் எரிந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அங்கு இருந்த தேர்தல் அதிகாரியிடம் இது தொடர்பாக புகார் தெரிவித்தார்.

வாக்குப்பதிவு தாமதம்

அவர்கள் பார்த்த போது அந்த வாக்குப்பதிவு எந்திரம் பழுதடைந்திருந்தது தெரியவந்தது. உடனடியாக இதுகுறித்து அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டு அங்கு வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.

பின்னர் பூந்தமல்லியில் இருந்து புதிய வாக்குப்பதிவு எந்திரம் வரவழைக்கப்பட்டு 1 மணி நேரம் தாமதமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. 

தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்காவில் விமான நிலையம் அருகே துப்பாக்கிச்சூடு; 8 பேர் சாவு; கொலையாளி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
அமெரிக்காவில் இண்டியானா மாகாணத்தின் தலைநகர் இண்டியானாபோலிஸ் நகரில் உள்ள சர்வதேச விமான நிலையத்துக்கு அருகில் பெட்எக்ஸ் என்கிற பன்னாட்டு ‘லாஜிஸ்டிக்ஸ்’ நிறுவனம் உள்ளது.
2. கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு வாக்குச்சாவடியில் சானிடைசர் வழங்க தி.மு.க.வினரை நிறுத்தியதால் பரபரப்பு
கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு வாக்குச்சாவடியில் சானிடைசர் வழங்க தி.மு.க.வினரை நிறுத்தியதால் பரபரப்பு.
3. ஆலந்தூரில் ஒரே இடத்தில் பிரசாரம் தி.மு.க. வேட்பாளர் வாகனம் மீது தண்ணீர் பாட்டிலை வீசிய எஸ்.டி.பி.ஐ. கட்சியினரால் பரபரப்பு
ஆலந்தூரில் ஒரே இடத்தில் பிரசாரம் தி.மு.க. வேட்பாளர் வாகனம் மீது தண்ணீர் பாட்டிலை வீசிய எஸ்.டி.பி.ஐ. கட்சியினரால் பரபரப்பு.
4. திருவண்ணாமலை தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்ய நிர்வாணமாக வந்த விவசாயிகளால் பரபரப்பு
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்ய நிர்வாணமாக வந்த விவசாயிகளால் பரபரப்பு ஏற்பட்டது. அதை தொடர்ந்து மாநில தலைவர் அய்யாக்கண்ணு உள்பட 16 பேரை போலீசார் கைது செய்தனர்.
5. கேரளாவில் பா.ஜ.க., கம்யூனிஸ்டு ரகசிய கூட்டணி உம்மன் சாண்டி பரபரப்பு குற்றச்சாட்டு
கேரளாவில் காங்கிரஸ் அணிக்கு எதிராக பா.ஜ.க.- கம்யூனிஸ்டு கட்சிகள் அமைத்துள்ள ரகசிய கூட்டணி அம்பலமாகியுள்ளது என கேரள மாநில முன்னாள் முதல்-மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவருமான உம்மன் சாண்டி குற்றம்சாட்டினார்.