மதுராந்தகம் சட்டமன்ற தொகுதியில் தேர்தலை புறக்கணித்த வாக்காளர்கள்


மதுராந்தகம் சட்டமன்ற தொகுதியில் தேர்தலை புறக்கணித்த வாக்காளர்கள்
x
தினத்தந்தி 7 April 2021 6:09 AM GMT (Updated: 7 April 2021 6:09 AM GMT)

மதுராந்தகம் சட்டமன்ற தொகுதியில் வாக்காளர்கள் தேர்தலை புறக்கணித்தனர்.

மதுராந்தகம்,

மதுராந்தகம் (தனி) சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மதுராந்தகம் நகராட்சி 4-வது வார்டில் உள்ள அப்துல்கலாம் நகரில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் 100-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். இந்த நகரம் புதிதாக வீடுகள் கட்டி புதிய நகரமாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு சாலை, குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரப்படாமல் உள்ளதாக கூறப்படுகிறது.

நேற்று இந்த பகுதி பொதுமக்கள் தங்களது வாக்காளர் அட்டையுடன் தேர்தல் நடக்கும் வாக்குச்சாவடி அருகே வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தேர்தலை புறக்கணித்தனர்

அப்போது அவர்கள் கூறியதாவது:-

வேட்பாளர்கள் தங்கள் பகுதிக்கு வந்தால் குறைகளை கூறுவதாக இருந்தோம். மதுராந்தகத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் யாரும் எங்கள் பகுதிக்கு வரவில்லை. இதனால் எங்கள் குறைகளை கூற முடியவில்லை. அதிகாரிகளும் எங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என்று கூறி கோஷங்களை எழுப்பினர்.

தகவல் அறிந்ததும் மதுராந்தகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அவர்கள் வாக்களிக்காமல் தேர்தலை புறக்கணித்து விட்டு சென்றனர். 

Next Story