தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலில் ஆண்களை விட பெண்கள் அதிகம் பேர் ஓட்டு போட்டுள்ளனர்


தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலில் ஆண்களை விட  பெண்கள் அதிகம் பேர் ஓட்டு போட்டுள்ளனர்
x
தினத்தந்தி 7 April 2021 1:10 PM GMT (Updated: 7 April 2021 1:10 PM GMT)

தூத்துக்குடி மாவட்டத்தில், சட்டமன்ற தேர்தலில் ஆண்களை விட பெண்கள் அதிகம் பேர் ஓட்டு போட்டுள்ளனர்

தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் ஆண்களை விட பெண்கள் அதிகம் ஓட்டு போட்டுள்ளனர்.
சட்டமன்ற தேர்தல்
தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தல் நேற்று முன்தினம் அமைதியான முறையில் நடந்தது. ஓட்டுப்பதிவு முடிவடைந்தவுடன் அனைத்து வாக்குப்பதிவு எந்திரங்களும் வாக்கு எண்ணிக்கை மையமான தூத்துக்குடி அரசு என்ஜினீயரிங் கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டன. நேற்று காலை 9 மணி வரை எந்திரங்கள் கொண்டு வரப்பட்டு, பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளன.
இந்த தேர்தலில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மொத்த வாக்காளர்கள் 14 லட்சத்து 87 ஆயிரத்து 782 பேரில் 5 லட்சத்து 8 ஆயிரத்து 112 ஆண்கள், 5 லட்சத்து 31 ஆயிரத்து 575 பெண்கள், 41 திருநங்கைகள் ஆக மொத்தம் 10 லட்சத்து 39 ஆயிரத்து 728 பேர் ஓட்டு போட்டு உள்ளனர். இது 69.88 சதவீதம் வாக்குப்பதிவு ஆகும்.
பெண்கள் அதிகம்
மாவட்டத்திலுள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும், ஆண்களை விட பெண்கள் அதிகமாக ஓட்டுப் போட்டுள்ளனர்.
விளாத்திகுளம் தொகுதியில் 76.55 சதவீதம் ஓட்டுக்களும், தூத்துக்குடி தொகுதியில் 65.08 சதவீதம் ஓட்டுக்களும், திருச்செந்தூர் தொகுதியில் 70.09 சதவீதம் ஓட்டுக்களும், ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் 72.34 சதவீதம் ஓட்டுக்களும், ஓட்டப்பிடாரம் தொகுதியில் 69.82 சதவீதம் ஓட்டுக்களும், கோவில்பட்டி தொகுதியில் 67.43 சதவீதம் ஓட்டுக்களும் பதிவாகி உள்ளன.

Next Story