மாவட்ட செய்திகள்

வாணாபுரம் அருகே கல்குவாரியில் மூழ்கிய சிறுவன் 2 நாட்களுக்கு பின் பிணமாக மீட்கப்பட்டான். + "||" + The body of a boy who drowned in Calcutta was recovered 2 days later

வாணாபுரம் அருகே கல்குவாரியில் மூழ்கிய சிறுவன் 2 நாட்களுக்கு பின் பிணமாக மீட்கப்பட்டான்.

வாணாபுரம் அருகே கல்குவாரியில் மூழ்கிய சிறுவன் 2 நாட்களுக்கு பின் பிணமாக மீட்கப்பட்டான்.
வாணாபுரம் அருகே கல்குவாரியில் மூழ்கிய சிறுவன் 2 நாட்களுக்கு பின் பிணமாக மீட்கப்பட்டான்.
வாணாபுரம்
தண்ணீரில் மூழ்கிய சிறுவன்

கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள மைக்கேல்புரத்தை சேர்ந்தவர் அந்தோணிசாமி. இவரது மகன் நித்தீஷ் (வயது 6). அதே பகுதியில் உள்ள பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தான். இந்த நிலையில் சம்பவத்தன்று  வாணாபுரம் அருகிலுள்ள தொண்டாமனூர் கல்குவாரியில் உறவினர்களுடன் குளித்து கொண்டிருந்தான். 

அப்போது எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதிக்கு சென்று தண்ணீரில் மூழ்கிவிட்டான். உடனடியாக உறவினர்கள் மற்றும் அப்பகுதியை சேர்ந்தவர்கள் தேடியும் நித்தீஷை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து  தண்டராம்பட்டு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

பிணமாக மீட்பு

தீயணைப்பு வீரர்களும், வாணாபுரம் போலீசாரும் சம்பவ இடத்திற்கு வந்து கல்குவாரியில் மூழ்கிய  நித்தீஷை மீட்க முயன்றும் முடியவில்லை. 

இந்தநிலையில் 2 நாட்கலுக்கு பின்னர் ரித்தீஷ் உடல் தண்ணீரில் மிதந்தது. அதையடுத்து உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.