மாவட்ட செய்திகள்

குத்துவிளக்கு ஏற்றி பெண்கள் வழிபாடு + "||" + Worship of women with candlelight

குத்துவிளக்கு ஏற்றி பெண்கள் வழிபாடு

குத்துவிளக்கு ஏற்றி பெண்கள் வழிபாடு
பட்டாளம்மன் கோவில் திருவிழாவையொட்டி குத்துவிளக்கு ஏற்றி பெண்கள் வழிபாடு நடத்தினர்
நிலக்கோட்டை:

நிலக்கோட்டை அருகே உள்ள மல்லியம்பட்டி பட்டாளம்மன், முத்தாலம்மன் கோவிலில் பங்குனி மாத திருவிழா நடந்து வருகிறது. இதையொட்டி அம்மன் அழைப்பு, சாமி ஊர்வலம் ஆகியவை நடந்தது. தீச்சட்டி எடுத்தும், அலகு குத்தியும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

விழாவையொட்டி நேற்று குத்துவிளக்கு பூஜை நடந்தது. இதில் கோவில் முன்பு ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் குத்துவிளக்கு ஏற்றி வழிபாடு நடத்தினர். இதனை ஏராளமான பக்தர்கள் பார்வையிட்டு, பக்தி பரவசத்துடன் அம்மனை தரிசனம் செய்தனர். 

இதில் நிலக்கோட்டை, மதுரை, திண்டுக்கல்லை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.