மாவட்ட செய்திகள்

ரவீந்திரநாத் எம்.பி. கார் மீது கல்வீசி தாக்கிய 17 பேர் மீது வழக்கு + "||" + Case against 17 people by attack car

ரவீந்திரநாத் எம்.பி. கார் மீது கல்வீசி தாக்கிய 17 பேர் மீது வழக்கு

ரவீந்திரநாத் எம்.பி. கார் மீது கல்வீசி தாக்கிய 17 பேர் மீது வழக்கு
போடி அருகே ரவீந்திரநாத் எம்.பி. கார் மீது கல்வீசி தாக்குதல் நடத்திய 17 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
போடி:
தமிழக சட்டமன்ற தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதையொட்டி போடி அருகே பெருமாள்கவுண்டன்பட்டி கிராமத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியை ஆய்வு செய்வதற்காக தேனி எம்.பி. ரவீந்திரநாத் காரில் சென்று கொண்டிருந்தார். 
பெருமாள்கவுண்டன்பட்டி கிராமத்திற்குள் அவர் வந்தபோது, அவரது கார் மீது சிலர் கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதில் அந்த காரின் முன்பக்க, பின்பக்க மற்றும் பக்கவாட்டு கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்தன. இதை கண்டித்து அ.தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 
இதைத்தொடர்ந்து போலீஸ் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, மறியலில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினரை கலைந்துபோக செய்தனர். 
இந்த சம்பவம் குறித்து ரவீந்திரநாத் எம்.பி.யின் கார் டிரைவரான பெரியகுளம் தென்கரையை சேர்ந்த பாண்டியன், போடி தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் பெருமாள்கவுண்டன்பட்டியை ேசர்ந்த பெரியபாண்டி, ராஜாங்கம், ஜெயேந்திரன், மணிகண்டன், விஜயன், மாயி, கார்த்திக் உள்பட 17 பேர் ரவீந்திரநாத் எம்.பி.யை தாக்கும் நோக்கத்தில் கார் மீது கல்வீசி தாக்கினர். இதை தடுக்க முயன்ற என்னையும், எம்.பி.யின் பாதுகாவலர்களையும் அவர்கள் தாக்க முயன்றனர் என்று கூறியிருந்தார். அதன்பேரில் பெரியபாண்டி உள்பட 17 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.