திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 2 வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 2 வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
x
தினத்தந்தி 7 April 2021 3:07 PM GMT (Updated: 7 April 2021 3:07 PM GMT)

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 2 வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை

3 அடுக்கு பாதுகாப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் தேர்தல் வாக்குப்பதிவு பணிகள் முடிக்கப்பட்டு நேற்று முன்தினம் இரவு முதல் 2,885 வாக்குச்சாவடிகளில் இருந்து படிப்படியாக அனைத்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும் திருவண்ணாமலை மார்க்கெட்டிங் கமிட்டி மற்றும் ஆரணி தச்சூர் பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி ஆகிய 2 வாக்கு எண்ணும் மையங்களில் சட்டமன்ற தொகுதி வாரியாக அறையில் வைக்கப்பட்டு ‘சீல்’ வைக்கும் பணிகள் நடைபெற்றது. 

வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 
வாக்கு எண்ணும் மையத்தில் மத்திய துணை ராணுவ படையினர் முதல் அடுக்கு பாதுகாப்பு வளையத்திலும், தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர் 2-வது அடுக்கு பாதுகாப்பு வளையத்திலும், வாக்கு எண்ணும் மையம் வெளியில் வழக்கமான போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். 

சி.சி.டி.வி. கேமரா மூலம் கண்காணிப்பு

வாக்கு எண்ணும் மையங்களில் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதி அறை முன்பு சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்பட்டு, கட்டுப்பாட்டு அறையில் 24 மணி நேரமும் கண்காணிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு வேட்பாளர்கள் சார்பாக அவர்களது முகவர் ஒருவர் அறையினை சி.சி.டி.வி. மூலம் கண்காணிப்பதற்காக வெளியில் தனியாக பார்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. 

வாக்கு எண்ணும் மையங்களில் உள் பாதுகாப்பு வளையத்திற்குள் நியமிக்கப்பட்ட அலுவலர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள், தேர்தல் மேற்பார்வையாளர்கள், உயர் அலுவலர்கள் மட்டும் வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டு உள்ளே வர முடியும். 



Next Story