மாவட்ட செய்திகள்

கோவில்பட்டியில்மது விற்ற 2 பேர் கைது + "||" + 2 arrested for selling liquor in kovilpatti

கோவில்பட்டியில்மது விற்ற 2 பேர் கைது

கோவில்பட்டியில்மது விற்ற 2 பேர் கைது
கோவில்பட்டியில் மது விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி மேற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ்கண்ணன் தலைமையில் போலீசார் மந்தித்தோப்பு சாலையில் மதுபானக் கடை அருகே நின்று வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். அப்போது மோட்டார் சைக்கிளில் சட்டவிரோதமாக 40 மது பாட்டில்களை விற்பனைக்கு கொண்டு சென்றது தெரியவந்தது.
விசாரணையில், அவர்கள் ராஜீவ் நகரைச் சேர்ந்த அருணாச்சலம் மகன் தங்கமாரியப்பன் (45) மற்றும் விஜயாபுரி காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த காளியப்பன் மகன் மணிகண்டன் (43) என்பது தெரியவந்தது.
இதுகுறித்து, மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 40 மது பாட்டில்கள் மற்றும்  மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மது விற்ற 2 பேர் கைது
மது விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
2. மது விற்ற 2 பேர் கைது
மது விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
3. மது விற்ற 2 பேர் கைது
மது விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்