மாவட்ட செய்திகள்

பெருமாநல்லூர் அருகே புதிய மின்மாற்றிக்கு பொதுமக்கள் பூஜை + "||" + transfarmar puujai

பெருமாநல்லூர் அருகே புதிய மின்மாற்றிக்கு பொதுமக்கள் பூஜை

பெருமாநல்லூர் அருகே புதிய மின்மாற்றிக்கு பொதுமக்கள் பூஜை
பெருமாநல்லூர் அருகே புதிய மின்மாற்றிக்கு பொதுமக்கள் பூஜை
பெருமாநல்லூர், 
பெருமாநல்லூர் அருகே, கணக்கம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட, மீனாட்சி நகர் பகுதியில் கடந்த சில வருடங்களாக மின்சாரத் தட்டுப்பாடு இருந்து வருகிறது. இரவு பகல் நேரங்களில் ஏற்படும் மின்னழுத்த குறைவால் வீட்டிலுள்ள மின் சாதன பொருட்கள் பழுதடைந்து வருகிறது. இதனால், அப்பகுதியிலுள்ள சிறு, குறு தொழில்களும் வெகுவாக பாதிக்கப்படுகிறது என அப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
 எனவே இப்பகுதியில் உயர் மின்னழுத்த மின்மாற்றி (டிரான்ஸ்பார்மர்) ஒன்றினை அமைத்தால்தான் தீர்வு ஏற்படாமல் எனவும், இதுதொடர்பாக பெருமாநல்லூர் மின் வாரிய அலுவலகத்தில் தொடர்ச்சியாக மனு அளித்தனர். இந்நிலையில் பெருமாநல்லூர் மின்வாரிய அலுவலகம் சார்பில் புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டு நேற்று பயன்பாட்டுக்கு வந்தது. புதிய மின்மாற்றிக்கு பூஜை செய்த அப்பகுதி பொதுமக்கள், மின்வாரிய அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தனர்.