தூத்துக்குடி அருகே புனித சவேரியார் ஆலயத்தில் இரட்டை கோபுரம் திறப்பு விழா நடந்தது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி அருகே உள்ள டி.சவேரியார் புரத்தில் புனித சவேரியார் ஆலயம் அமைந்து உள்ளது. இந்த ஆலயத்தில் புதிதாக இரட்டை கோபுரம் கட்டப்பட்டு உள்ளது. இந்த கோபுரத்தின் திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவுக்கு தூத்துக்குடி மறைமாவட்ட பிஷப் ஸ்டீபன் அந்தோணி தலைமை தாங்கி, இரட்டை கோபுரங்களை திறந்து வைத்தார். தொடர்ந்து சிறப்பு திருப்பலிகள் நடந்தன.
விழாவில் பங்கு தந்தை ஜேசு நசரேன் மற்றும் திரளான பங்கு மக்கள் கலந்து கொண்டனர்.