மாவட்ட செய்திகள்

தாராபுரம் ராஜவாய்க்கால் பாலத்தில்தடுப்புசுவா் கட்ட வேண்டும் + "||" + tharapuram raja vaikkaal

தாராபுரம் ராஜவாய்க்கால் பாலத்தில்தடுப்புசுவா் கட்ட வேண்டும்

தாராபுரம் ராஜவாய்க்கால் பாலத்தில்தடுப்புசுவா் கட்ட வேண்டும்
தாராபுரம் ராஜவாய்க்கால் பாலத்தில் தடுப்புசுவா் கட்ட வேண்டும்
குண்டடம் 
தாராபுரம் வழியாக செல்லும் அமராவதி ஆற்றின் கிளை வாய்க்கால்களில் ஒன்று ராஜவாய்க்கால். இந்த வாய்க்காலின் வழியே அமராவதி ஆற்றில் தண்ணீர் திறக்கும் போது தாராபுரம் பகுதியில் உள்ள கடைமடை பகுதி விவசாயத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராஜ வாய்க்காலில் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது தண்ணீா் வரத்து இல்லை. இதனால் தாராபுரம் நகரில் இருந்து வரும் சாக்கடை கழிவுநீா் வாய்க்காலில் செல்கிறது. இந்த நிலையில் தாராபுரம் கல்யாணராமா் கோவில் அருகே ராஜவாய்க்காலின் குறுக்கே கட்டப்பட்ட பாலம் கடந்த 6  மாதங்களுக்கு முன்பு உடைந்தது. நகாின் முக்கிய சாலை செல்லும் அந்த பாலத்தின் வழியாக ஏராளமான பொதுமக்கள்  2 மற்றும் 4 சக்கர வாகனங்களில் சென்று வருகின்றனா். 
அப்போது எதிா்பாராத விதமாக அவா்கள் வாய்க்காலுக்குள் விழுவதற்கு வாய்ப்பு உள்ளது. மேலும் அந்த பகுதியில் விளையாடும் சிறுவா்கள் வாயக்காலுக்குள் தவறி விழும் ஆபத்தும் உள்ளது. மேலும் அங்கு குப்பைகள் கொட்டப்படுவதால் கழிவுநீா் செல்ல வழியின்றி தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதியில் துா்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீா்கேடும் ஏற்பட்டு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாாிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து  ராஜவாய்க்கால் பாலத்தை மீண்டும் கட்டித்தருவதோடு, வாய்க்காலை தூா்வார வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.