மாவட்ட செய்திகள்

ஆனைமலையில் கொப்பரை ஏலம் நடக்கும் தேதி மாற்றம் + "||" + Change the date of the cauldron auction

ஆனைமலையில் கொப்பரை ஏலம் நடக்கும் தேதி மாற்றம்

ஆனைமலையில் கொப்பரை ஏலம் நடக்கும் தேதி மாற்றம்
ஆனைமலையில் கொப்பரை ஏலம் நடக்கும் தேதி மாற்றம்
பொள்ளாச்சி

ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் செவ்வாய்கிழமை கொப்பரை ஏலம் நடக்கும். இந்த ஏலத்தில் சுற்று வட்டார கொப்பரை உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகள் பங்கேற்பார்கள். 

இந்த நிலையில், சட்டமன்ற தேர்தலின் காரணமாக, கொப்பரை ஏலம் ரத்து செய்யப்பட்டு அடுத்த வாரம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால் அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை தெலுங்கு வருடப்பிறப்பு காரணமாக அரசு விடுமுறை என்பதால், வருகிற 12-ந் தேதி கொப்பரை ஏலம் நடக்கும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. 

இதனை கொப்பரை உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் மணிவாசகம் தெரிவித்து உள்ளார்.