மாவட்ட செய்திகள்

கோவையில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. + "||" + Weils Impact Increase in Coimbatore

கோவையில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.

கோவையில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.
கோவையில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் மதிய நேரங்களில் பொதுமக்கள் நடமாட்டம் குறைந்து காணப்படுகிறது.
கோவை

கோவையில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் மதிய நேரங்களில் பொதுமக்கள் நடமாட்டம் குறைந்து காணப்படுகிறது.

கோடை வெப்பம் அதிகரிப்பு

கோவையில் ஆண்டுதோறும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் கோடை வெயில் அதிகமாக இருக்கும். இந்த ஆண்டும் வெயில் அளவு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று கோவையில் வெப்பநிலை 97 டிகிரியாக உயர்ந்தது.

கோவையில் நாளுக்கு நாள் வெப்பநிலை அதிகரித்து வருவதால், வெப்பநிலை 100 டிகிரியை எட்ட வாய்ப்பு உள்ளது. நகர் பகுதியில் கடும் வெயிலின் தாக்கம் காரணமாக வாகனங்களில் செல்பவர்கள் மிகவும் அவதி அடைந்து வருகிறார்கள். 

கடந்த 3 நாட்களுக்கு முன்பு புறநகர் பகுதிகளில் லேசான மழை பெய்தது. அதன் பிறகு வெயில் வாட்டி எடுத்து வருகிறது.

கூட்டம் குறைந்தது

நகரில் வெயில் அளவு அதிகரித்துள்ளதால் சாலைகளில் பொதுமக்களின் நடமாட்டம் குறைந்து வருகிறது. கடைகளில் காலை மற்றும் மாலையில் மட்டும் பொதுமக்கள் பொருட்கள் வாங்க வருகிறார்கள். 

பகல் நேரத்தில் யாரும் வெளியில் வருவதில்லை. தேர்தல் பிரசாரம், மற்றும் தேர்தல் முடிந்தபிறகு பகலில் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது.

கோவையில் வெப்பநிலை உயர்வு குறித்து கோவை வேளாண் பல்கலைக்கழக வானிலை ஆய்வு மையஅதிகாரிகள் கூறும்போது, "கோடை வெப்பம் வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கக் கூடும். வறண்ட வானிலையே நீடிக்கும். இடையில் கோடை மழை பெய்யவும் வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்தனர்.

குளிர்பான கடைகளில் கூட்டம் அதிகரிப்பு

வெயில் அதிகரித்துள்ளதால் கோவையில் சாலையோரங்களில் உள்ள குளிர்பான கடைகளில் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. தர்பூசணி விற்பனை மோர், கம்பங்கூழ் விற்பனையும் நகரில் அதிகரித்துள்ளது.