பிஏபி அணைகளின் நீர்மட்டம் குறைகிறது


பிஏபி அணைகளின் நீர்மட்டம் குறைகிறது
x
தினத்தந்தி 7 April 2021 5:15 PM GMT (Updated: 7 April 2021 5:15 PM GMT)

மழை இல்லாததால் பி.ஏ.பி. அணைகளின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.

பொள்ளாச்சி

மழை இல்லாததால் பி.ஏ.பி. அணைகளின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.

பி.ஏ.பி. அணைகள்

பி.ஏ.பி. திட்டத்தின் முக்கிய அணைகளாக சோலையார், பரம்பிக்குளம், ஆழியாறு அணைகள் மற்றும் தொகுப்பு அணைகள் உள்ளன. 

இந்த திட்டத்தின் மூலம் பாசனத்திற்கும், குடிநீர் தேவைக்கும் அணைகளில் இருந்து தண்ணீர் வழங்கப்படுகிறது. 

இந்த நிலையில் கடந்த ஆண்டு பெய்த தென்மேற்கு பருவமழையின் காரணமாக அனைத்து அணைகளும் முழுகொள்ளளவை எட்டின. மேலும் உபரிநீரும் அணைகளில் இருந்து வெளியேற்றப்பட்டது.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக மழை இல்லை. மேலும் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் அணைகளின் நீர்மட்டம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. 1

60 அடி கொள்ளளவு கொண்ட சோலையார் அணையின் நீர்மட்டம் 1.79 அடியாகவும், 72 அடி கொள்ளளவு கொண்ட பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் 42.02 அடியாகவும், 120 அடி கொள்ளளவு கொண்ட ஆழியாறு அணையின் நீர்மட்டம் 92.45 அடியாகவும் சரிந்தது. 

அணைகளின் நீர்மட்டம் குறைந்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

நீர்இருப்பு

மழை பெய்யாததால் அணைகளின் நீர்மட்டம் குறைந்து வருகிறது. பரம்பிக்குளம் அணையில் இருந்து வினாடிக்கு 977 கன அடி நீர் திறந்து விடப்பட்டு உள்ளது. 

இந்த தண்ணீர் சர்க்கார்பதியில் மின் உற்பத்தி செய்த பின், காண்டூர் கால்வாய் வழியாக வினாடிக்கு 835 கன அடியாக திருமூர்த்தி அணைக்கு கொண்டு செல்லப்படுகிறது.

தற்போது ஆழியாறு அணையில் இருந்து பாசனத்திற்கும், குடிநீர் தேவைக்கும் சேர்த்து வினாடிக்கு 269 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது.

 அணையின் நீர்மட்டம் குறைந்து வந்தாலும், கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. போதுமான தண்ணீர் அணையில் இருப்பு வைக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story