மாவட்ட செய்திகள்

தாராபுரம் அருகே வெறிநாய்கள் கடித்து 5 ஆடுகள் செத்தன. + "||" + sheep death

தாராபுரம் அருகே வெறிநாய்கள் கடித்து 5 ஆடுகள் செத்தன.

தாராபுரம் அருகே வெறிநாய்கள் கடித்து 5 ஆடுகள் செத்தன.
தாராபுரம் அருகே வெறிநாய்கள் கடித்து 5 ஆடுகள் செத்தன.
குண்டடம்
தாராபுரம் அருகே வெறிநாய்கள் கடித்து 5 ஆடுகள் செத்தன. 
5 ஆடுகள் செத்தன
 தாராபுரத்தை அடுத்த பஞ்சப்பட்டியை சேர்ந்தவர் கந்தசாமி . விவசாயி. இவர் தனது தோட்டத்தில் பட்டி அமைத்து 12க்கும் மேற்பட்ட செம்மறியாடுகள் வளர்த்து வருகிறார். ஆடுகளை தினமும் காலையில் 10 மணியளவில் மேய்ச்சலுக்காக ஓடிச்சென்று விட்டு மாலையில் பட்டியில் அடைப்பது வழக்கம்.
இந்த நிலையில் நேற்று வழக்கம்போல் ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச்சென்று, காட்டுப்பகுதியில் விட்டு விட்டு வீட்டிற்கு வந்து விட்டார். மதியம் 12 மணியளவில் திடீரென ஆடுகள் அலறும் சத்தம் கேட்டது. இதையடுத்து கந்தசாமி வீட்டிலிருந்து வெளியே சென்று பார்த்தார். அப்போது சில ஆடுகள் அங்கும் இங்குமாக ஓடியது. அப்போது ஆடுகளை  வெறி நாய்கள்  கடித்து கொண்டிருந்தது. அதை பார்த்து கந்தசாமி சத்தம் போட்டார். இதையடுத்து வெறிநாய்கள் தப்பி ஓடிவிட்டன. இதில் 5 ஆடுகள் செத்து விட்டன. 
சிகிச்சை
 மேலும் சில ஆடுகள் காயமடைந்து கிடந்தன. இதையடுத்து கால்நடைத்துறை மருத்துவர்களுக்கு தகவல் தெரிவித்தார். மருத்துவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்த ஆடுகளுக்கு சிகிச்சை அளித்தனர். செத்துப்போன ஆடுகள் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு புதைக்கப்பட்டன. 
இது பற்றி கந்தசாமி கூறும்போது  ஆடுகளை கடித்து குதறும் நாய்களை பிடித்து கொல்ல வேண்டும்.  இழப்பீடு வழங்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.