மாவட்ட செய்திகள்

காட்டுநாயக்கன் சமூகத்தினர் மறியல் போராட்டம் + "||" + Stir struggle of the savage community

காட்டுநாயக்கன் சமூகத்தினர் மறியல் போராட்டம்

காட்டுநாயக்கன் சமூகத்தினர் மறியல் போராட்டம்
பாதையை அடைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து காட்டுநாயக்கன் சமூகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் வடலூர்-விருத்தாசலம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வடலூர், 

வடலூர் கோட்டக்கரை கோழிப்பள்ளம் பகுதியில் காட்டுநாயக்கன் சமூகத்தை சேர்ந்த 60 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் வசிக்கும் பகுதியில் இருந்து வடலூர் பஸ் நிலையம் மற்றும் கடைகளுக்கு வந்து செல்லும் வகையில் பாதை உள்ளது. இந்த பாதையை தான், அவர்கள் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்தனர்.  இந்த நிலையில் அந்த பாதையை தனிநபர் ஒருவர் அடைத்து சுற்றுச்சுவர் கட்டி வருவதாக தெரிகிறது. இதற்கு காட்டுநாயக்கன் சமூகத்தை சேர்ந்த மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து நேற்று காலையில் ஒன்று திரண்டனர். பின்னர் அவர்கள் காலை 10 மணி அளவில் வடலூர்-விருத்தாசலம் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

போக்குவரத்து பாதிப்பு 

இந்த போராட்டத்தால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலையின் இருபுறமும் நீண்ட தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.  இது பற்றி தகவல் அறிந்ததும் வடலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மரியசோபி மஞ்சுளா மற்றும் போலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசார், இது தொடர்பாக சம்பந்தபட்ட துறை அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு, காட்டுநாயக்கன் சமூகத்தினர் கலைந்து சென்றனர். பின்னர் அந்த பகுதியில் போக்குவரத்து சீரானது. 

தொடர்புடைய செய்திகள்

1. பழைய ஜெயங்கொண்டத்தில் குடிநீர் கேட்டு பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
பழைய ஜெயங்கொண்டத்தில் குடிநீர் கேட்டு பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். இதையடுத்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
2. ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியில் சாக்கடை கால்வாயை சுத்தம் செய்யக்கோரி பொதுமக்கள் போராட்டம்
ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியில் சாக்கடை கால்வாயை சுத்தம் செய்யக்கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
3. கோவில்களில் திருவிழா நடத்த அனுமதி கோரி நெல்லையில் நாட்டுப்புற கலைஞர்கள் மேளதாளம் முழங்க போராட்டம்
கோவில்களில் திருவிழா நடத்த அனுமதி கோரி நெல்லையில் நாட்டுப்புற கலைஞர்கள் மேளதாளம் முழங்க போராட்டத்தில் ஈடுபட்டனர்.
4. தென்காசியில் நாட்டுப்புற கலைஞர்கள் போராட்டம் கோவில் விழாக்களை நடத்த கோரிக்கை
தென்காசியில் நாட்டுப்புற கலைஞர்கள் போராட்டம் நடத்தினார்கள்.
5. திருவள்ளூர் மாவட்டத்தில் ஏரியில் சவுடு மண் எடுக்க எதிர்ப்பு; பொதுமக்கள் போராட்டம்
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், புன்னப்பாக்கம் கிராமத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 165 ஏக்கர் பரப்பளவில் ஏரி ஒன்று உள்ளது.