மாவட்ட செய்திகள்

லாலாபேட்டை அருகே 2 குழந்தைகளின் தாய் தீக்குளித்து தற்கொலை + "||" + Suicide

லாலாபேட்டை அருகே 2 குழந்தைகளின் தாய் தீக்குளித்து தற்கொலை

லாலாபேட்டை அருகே 2 குழந்தைகளின் தாய் தீக்குளித்து தற்கொலை
லாலாபேட்டை அருகே குடும்ப தகராறால் 2 குழந்தைகளின் தாய் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
லாலாபேட்டை
தீக்குளிப்பு
கரூர் மாவட்டம், லாலாபேட்டை அருகே உள்ள குரும்பப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ரவீந்திரன். இவரது மனைவி குணசுந்தரி (வயது 27). இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் ரவீந்திரன் அடிக்கடி மது அருந்தி விட்டு வீட்டுக்கு வருவதால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு உள்ளது. 
இதனால் மனமுடைந்து காணப்பட்ட குணசுந்தரி வீட்டில் பின்புறம் சென்று யாரும் இல்லாத நேரத்தில் நேற்று முன்தினம் மாலை தனது உடலில் மண்எண்ணெய்யை ஊற்றி தீ வைத்து கொண்டார்.  
தற்கொலை
இதில் உடல் முழுவதும் தீபரவியதால் குணசுந்தரி அலறி துடித்தார். இவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். பின்னர் தீக்காயம் அடைந்த குணசுந்தரியை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. 
பின்னர் அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி குணசுந்தரி பரிதாபமாக இறந்தார். இந்த தற்கொலை சம்பவம் குறித்து லாலாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. விஷம் குடித்து 11-ம் வகுப்பு மாணவர் தற்கொலை
முதுகுளத்தூர் அருகே செல்போனில் விளையாடியதை தந்தை கண்டித்ததால் விஷம் குடித்து 11-ம் வகுப்பு மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.
2. திருக்கோவிலூர் அருகே 2 குழந்தைகளின் தாய் தூக்குப்போட்டு தற்கொலை
திருக்கோவிலூர் அருகே 2 குழந்தைகளின் தாய் தூக்குப்போட்டு தற்கொலை
3. விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை
விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
4. குடும்பத்தகராறு: இளம் பெண் தூக்குப்போட்டு தற்கொலை; கணவர் கைது
ஊத்துக்கோட்டை அருகே கணவர் குடிப்பழக்கத்திற்கு ஆளானதால் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
5. கோபி அருகே காதலித்து திருமணம் செய்த கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை- காரணம் என்ன? போலீஸ் விசாரணை
கோபி அருகே காதலித்து திருமணம் செய்த கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதற்கான காரணம் என்ன? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.