மாவட்ட செய்திகள்

நெல்லையில் வாக்கு எண்ணும் மையத்தில் பலத்த பாதுகாப்பு + "||" + Heavy security at the counting center in Nellai

நெல்லையில் வாக்கு எண்ணும் மையத்தில் பலத்த பாதுகாப்பு

நெல்லையில் வாக்கு எண்ணும் மையத்தில் பலத்த பாதுகாப்பு
நெல்லையில் வாக்கு எண்ணும் மையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
நெல்லை, ஏப்:
நெல்லையில் வாக்கு எண்ணும் மையத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

சீல் வைப்பு

நெல்லை மாவட்டத்தில் நெல்லை, பாளையங்கோட்டை, அம்பை, நாங்குநேரி, ராதாபுரம் ஆகிய 5 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளில் நேற்று முன்தினம் தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையமான நெல்லை அரசு என்ஜினீயரிங் கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டன.
அங்கு 5 தொகுதிகளுக்கும் தனித்தனி அறைகள் அமைக்கப்பட்டு அதன் உள்ளே வரிசையாக வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டன. நேற்று மதியம் கலெக்டர் விஷ்ணு முன்னிலையில் 5 அறைகளும் பூட்டி சீல் வைக்கப்பட்டன.

பலத்த பாதுகாப்பு

இந்த வாக்குகள் அனைத்தும் வருகிற மே மாதம் 2-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
அதுவரை வாக்கு எண்ணும் மையத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. அதாவது வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகள் முன்பு துணை ராணுவ படையினர் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். அந்த கட்டிட பகுதியில் மணிமுத்தாறு பட்டாலியன் போலீசார் பாதுகாப்பு பணிக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும் கட்டிடத்தை சுற்றிலும் ஆயுதப்படை போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் உள்ள அறைக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதுதவிர அரசு என்ஜினீயரிங் கல்லூரிக்குள் வேறு நபர்கள் யாரும் நுழைந்து விடாதபடி கண்காணிக்கும் வகையில் நுழைவு வாசல் பகுதியில் உள்ளூர் போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும் கல்லூரியை சுற்றிலும் சுற்றுச்சுவரில் யாரும் ஏறி குதித்து விடாதபடி தடுக்கும் வகையில் நவீன இரும்பு சுருள் கம்பிகள் பொருத்தப்பட்டுள்ளன. கல்லூரியின் வெளியே 4️ முனைகளிலும் மரக்கட்டைகளால் கண்காணிப்பு கோபுரமும் அமைக்கப்பட்டுள்ளது. அதன்மீது 24 மணி நேரமும் போலீசார் அமர்ந்து கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

156 கண்காணிப்பு கேமராக்கள்

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் இருக்கும் அறை மற்றும் கல்லூரி வளாகத்துக்குள் வந்து செல்வோரை கண்காணிக்கும் வகையில் மொத்தம் 156 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. தொகுதி வாரியாக இந்த கேமராக்கள் ஒருங்கிணைக்கப்பட்டு 5 பெரிய திரை டி.வி.களில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இந்த டி.வி.க்கள் மூலம் வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக உள்ளதா? என்பதை நேரில் பார்த்து தெரிந்து கொள்வதற்காக அரசியல் கட்சி வேட்பாளர்களின் ஏஜெண்டுகளுக்கு தனி அறை அமைக்கப்படுகிறது. அங்கிருந்தவாறு அவர்கள் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக உள்ளதா? என்பதை உறுதி செய்து கொள்ளலாம்.

24 மணி நேரம்

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:- ஒவ்வொரு தொகுதிக்கும் தலா 25 துணை ராணுவ வீரர்கள் 24 மணி நேர பாதுகாப்பு பணிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளனர். இதில் ஒரே நேரத்தில் ஒரு சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் 4 துணை ராணுவ வீரர்கள் என மொத்தம் 5 பேர் வாக்குப்பதிவு எந்திரங்கள் அறையின் அருகில் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள். அவர்கள் 3 மணி நேரத்துக்கு ஒரு முறை சுழற்சி முறையில் பணிபுரிவார்கள். இதுதவிர 450 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். இவர்கள் 3 ஷிப்ட் என்ற அடிப்படையில், அதாவது ஒரு ஷிப்டுக்கு 150 போலீசார் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள். துணை ராணுவம், போலீசார், கண்காணிப்பு கேமராக்கள், வேட்பாளர்களின் ஏஜெண்டுகள் என 24 மணி நேரமும் பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு எந்திரங்கள் பத்திரமாக இருக்கும்.
பொதுவாக 3 அடுக்கு பாதுகாப்பாக தெரிந்தாலும், கல்லூரி நுழைவு வாசல் பகுதி மற்றும் கல்லூரி வெளிப்பகுதி ரோட்டில் போலீஸ் பாதுகாப்பு என 5 அடுக்கு பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. இன்று குடியரசு தினவிழா: நெல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
குடியரசு தினவிழாவை முன்னிட்டு நெல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.