மாவட்ட செய்திகள்

கரூர் குப்பை கிடங்கில் தீ விபத்து + "||" + Fire in the garbage depot

கரூர் குப்பை கிடங்கில் தீ விபத்து

கரூர் குப்பை கிடங்கில் தீ விபத்து
கரூர் குப்பை கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது.
கரூர்
கரூர் ஐந்து ரோட்டில் இருந்து வாங்கல் செல்லும் சாலையில் அரசு காலனியில் இருந்து சற்று தொலைவில் குப்பை கிடங்கு ஒன்று கடந்த பல ஆண்டுகளாக உள்ளது. இந்த குப்பை கிடங்கில் கரூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்படுவது வழக்கம். பல ஆண்டுகளாக அங்கு குப்பைகள் கொட்டப்பட்டு மலைபோல் குவிந்து கிடக்கிறது. இந்தநிலையில்,  நேற்று வெப்ப அழுத்தம் காரணமாக அந்த குப்பை கிடங்கில் தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதுகுறித்து தகவல் அறிந்த கரூர் தீயணைப்பு நிலைய அலுவலர் விஜயகுமார் தலைமையிலான தீயணைப்பு வீரர்களும் மற்றும் அரவக்குறிச்சி தீயணைப்பு நிலைய வீரர்களும் சம்பவ இடத்திற்கு வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் அப்பகுதியில் புகை மண்டலமாக காட்சியளித்தது.