திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோவிலில் தீர்த்தவாரி


திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோவிலில் தீர்த்தவாரி
x
தினத்தந்தி 7 April 2021 6:38 PM GMT (Updated: 2021-04-08T00:08:13+05:30)

திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோவிலில் பங்குனி திருவிழா தீர்த்தவாரி நடந்தது.

ஏர்வாடி, ஏப்:
திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவ திருவிழா கடந்த 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் 11-ம் நாளான நேற்று முன்தினம் தீர்த்தவாரி நடைபெற்றது. இதனை முன்னிட்டு நம்பியாற்றில் பெருமாள் தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம், அலங்கார தீபாராதனை நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பெருமாள் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். தொடர்ந்து நம்பி சுவாமிகள் வெற்றிவேர் சப்பரத்தில் பவனி வந்தனர்.

Next Story