மாவட்ட செய்திகள்

கோவை மாவட்டத்தில் ஒரே நாளில் 332 பேருக்கு கொரோனா + "||" + Corona for 332 people in a single day

கோவை மாவட்டத்தில் ஒரே நாளில் 332 பேருக்கு கொரோனா

கோவை மாவட்டத்தில் ஒரே நாளில் 332 பேருக்கு கொரோனா
கோவை மாவட்டத்தில் ஒரே நாளில் 332 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
கோவை,

கோவை மாவட்டத்தில் கட்டுக்குள் இருந்த கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக நாளுக்கு நாள் அதிரிகத்து வருகிறது. இதனால் சுகாதாரத்துறை அதிகாரிகள் கொரோனா தடுப்பூசி போடும் பணியையும், தடுப்பு பணியையும் தீவிரப்படுத்தி உள்ளனர்.

45 வயதுக்கு மேற்பட்டவர்கள் கண்டிப்பாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் வலியுறுத்தி வருகின்றனர். 

இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் நேற்று 332 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 61 ஆயிரத்து 162 ஆக உயர்ந்தது.

கோவை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 36 வயது பெண் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் மாவட்டத்தில் தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 696-ஆக உயர்ந்துள்ளது.

இதுதவிர அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 150 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதன் மூலம் கோவையில், இதுவரை 57 ஆயிரத்து 699 பேர் குணமடைந்து உள்ளனர்.

 தற்போது 2 ஆயிரத்து 767 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தகவலை சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.