மாவட்ட செய்திகள்

வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ததாக தி.மு.க.வினர் 2 பேர் கைது + "||" + 2 DMK activists arrested

வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ததாக தி.மு.க.வினர் 2 பேர் கைது

வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ததாக தி.மு.க.வினர் 2 பேர் கைது
வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ததாக தி.மு.க.வினர் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கணபதி,

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் கோவை வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கணபதி மாநகர் பகுதியில் தி.மு.க.வை சேர்ந்த 2 பேர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வருவதாக பறக்கும்படை அதிகாரி சுமதிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

 உடனடியாக அவரது தலைமையிலான பறக்கும் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.  அங்கு வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து கொண்டிருந்த கணபதி மாநகரை சேர்ந்த ரவிபாலு (வயது 46), வெள்ளிங்கிரி (59) ஆகியோரை கையும் களவுமாக பிடித்தனர். 

மேலும் அவர்களிடம் இருந்த ரூ.73 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அவர்கள் 2 பேரையும் பறக்கும் படையினர் சரவணம்பட்டி போலீசாரிடம் ஒப்படைத்தனர். சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் ரவிபாலு, வெள்ளிங்கிரி ஆகிய 2 பேரை கைது செய்தனர்.