ஆவுடையார்கோவில் பகுதியில் சரக்கு வாகனங்களில் வீடு, வீடாக விற்கப்படும் தர்பூசணி


ஆவுடையார்கோவில் பகுதியில்  சரக்கு வாகனங்களில் வீடு, வீடாக விற்கப்படும் தர்பூசணி
x
தினத்தந்தி 7 April 2021 6:53 PM GMT (Updated: 7 April 2021 6:53 PM GMT)

சரக்கு வாகனங்களில் வீடு, வீடாக விற்கப்படும் தர்பூசணி

ஆவுடையார்கோவில்:
ஆவுடையார்கோவில் பகுதியில் எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு கடும் வெயில் அடித்து வருகிறது. அதிகாலையில் குளிர்ந்த காற்று வீசினாலும் நேரம் செல்ல, செல்ல வெயிலின் உக்கிரம் அதிகரித்து கொண்டே செல்கிறது. மதியம் 12 மணிக்கு பிறகு அனல் காற்றுவீசுகிறது. மாலை 6 மணி வரை வெயிலின் தாக்கம் இருந்தது. இதனால் பொதுமக்கள் சூட்டை தணிப்பதற்காக இளநீர், நுங்கு, குளிர்பானங்களை நாடிசெல்கின்றனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தர்பூசணி வியாபாரிகள் சரக்குவாகனங்களில் வீதி, வீதியாக சென்று விற்பனை செய்து வருகின்றனர். அதுமட்டுமின்றி ஆவுடையார்கோவில் கடைவீதியில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சரக்குவாகனங்களை நிறுத்தி தர்பூசணிகளை விற்பனை செய்து வருகின்றனர். இதனை பொதுமக்கள் ஆர்வமாக வாங்கி செல்கின்றனர்.

Next Story