சிவகங்கை மாவட்ட வாக்குப்பதிவில் திருப்பத்தூர் தொகுதி அதிகம் பதிவாகி உள்ளது.
சிவகங்கை,
சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, திருப்பத்தூர், காரைக்குடி, மானாமதுரை தனி ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த 4 சட்டமன்ற தொகுதிகளிலும் நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடந்தது. இதில் சிவகங்கையில் 65.66 சதவீதமும், திருப்பத்தூரில் 72.01 சதவீதமும், காரைக்குடியில் 66.22 சதவீதமும், மானாமதுரை தனி தொகுதியில் 71.87 சதவீதமும் வாக்குகள் பதிவான. இதில் அதிகப்பட்சமாக திருப்பத்தூர் தொகுதியில் தான் 72.01 சதவீத வாக்குகள் பதிவானது குறிப்பிடத்தக்கது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 4 தொகுதிகளிலும் 69.60 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. இந்த தேர்தலில் ஆண்களை விட பெண்களே அதிகளவில் வாக்களித்துள்ளனர்.