அரசு பஸ் டிரைவரை தாக்கிய வாலிபர் கைது


அரசு பஸ் டிரைவரை தாக்கிய வாலிபர் கைது
x
தினத்தந்தி 7 April 2021 6:59 PM GMT (Updated: 7 April 2021 6:59 PM GMT)

விருதுநகரில் அரசு பஸ் டிரைவரை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

விருதுநகர், 
விருதுநகரில் அரசு பஸ் டிரைவரை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். 
 அரசு பஸ்
விருதுநகர் அருகே உள்ள சங்கரலிங்காபுரத்தில் இருந்து விருதுநகருக்கு நேற்று காலை அரசு போக்குவரத்து கழக பஸ் வந்து கொண்டிருந்தது.
இந்த பஸ்சை பட்டம்புதூரை சேர்ந்த டிரைவர் ராமர் ஓட்டி வந்தார். இந்த பஸ் விருதுநகர்- சாத்தூர் ரோட்டில் மேல சின்னையாபுரம் விலக்கு அருகே வந்து கொண்டிருந்தபோது அந்த கிராமத்தை சேர்ந்த ராமர் (வயது 27) என்பவர் பஸ்சை நிறுத்துமாறு சைகை காட்டினார்.
டிரைவர் மீது தாக்குதல் 
 பஸ் சிறிது தூரம் தாண்டி நிறுத்தப்பட்டதால் ராமர் வேகமாக ஓடி வந்து பஸ்சில் ஏறினார். பஸ் விருதுநகர் பழைய பஸ் நிலையம் வந்தடைந்தது.
 இந்நிலையில் அப்போது திடீரென பஸ் டிரைவர் இருக்கைக்கு பின்புறம் அமர்ந்திருந்த ராமர், டிரைவர் ராமரை தாக்கி காயப்படுத்தியதாக கூறப்படுகிறது.
வாலிபர் கைது 
இதையடுத்து போக்குவரத்து கழக ஊழியர்கள் வாலிபர் ராமரை பிடித்து பஸ்நிலைய புறக்காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.அதனை தொடர்ந்து போலீசார், ராமரை மேற்கு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர்.
இதனையடுத்து போக்குவரத்து கழக பஸ் டிரைவர் ராமர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார், வாலிபர் ராமர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். 

Next Story