மாவட்ட செய்திகள்

வாகனம் மோதி அ.தி.மு.க. பிரமுகர் சாவு + "||" + Vehicle collides with AIADMK Celebrity death

வாகனம் மோதி அ.தி.மு.க. பிரமுகர் சாவு

வாகனம் மோதி அ.தி.மு.க. பிரமுகர் சாவு
வாகனம் மோதி அ.தி.மு.க. பிரமுகர் பரிதாபமாக இறந்தார்
வாடிப்பட்டி
வாடிப்பட்டி மின்வாரிய அலுவலகம் எதிரில் நேற்று அதிகாலை 4 மணிக்கு மதுரை-திண்டுக்கல் தேசியநான்கு வழிச்சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி 60 வயது மதிக்கத்தக்க முதியவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்து அதிகாலை நேரம் நடந்ததால் தொடர்ந்து சென்ற வாகனங்கள் அவரது தலைபகுதியில் ஏறி சென்றதால் உருக்குலைந்து முகம் சிதைந்து காணப்பட்டது. வெள்ளைச்சட்டை, வெள்ளை வேட்டி அணிந்திருந்தார். அந்த வேட்டியில் அ.தி.மு.க. கரை போடப்பட்டு இருந்து. அதனால் அவர் அ.தி.மு.க. பிரமுகர் என்று தெரியவந்தது. ஆனால் அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என தெரியவில்லை. இது சம்மந்தமாக சின்னமநாயக்கன்பட்டி கிராம நிர்வாக அலுவலர் ஜெயபாண்டி கொடுத்த புகாரின்பேரில் வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சில்வியா ஜாஸ்மின் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. வாலிபர் உள்பட 2 பேர் கொரோனாவுக்கு பலி
கடலூர் மாவட்டத்தில் புதிதாக 179 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 27 ஆயிரத்தை கடந்துள்ளது. மேலும் கொரோனாவுக்கு 2 பேர் பலியாகியுள்ளனர்.
2. சாலை விபத்தில் படுகாயம் அடைந்த கல்லூரி உதவி பேராசிரியர் பலி
புன்னம்சத்திரம் அருகே சாலை விபத்தில் படுகாயம் அடைந்த கல்லூரி உதவி பேராசிரியர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
3. ஓமனில், கொரோனாவுக்கு 9 பேர் பலி
ஓமனில் நேற்று மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனை முடிவுகளில் 1,269 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. ஆவடியில் எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி எலக்ட்ரீசியன் பலி
ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் பரத்குமார்.
5. விபத்தில் எலக்ட்ரீசியன் பலி
விபத்தில் எலக்ட்ரீசியன் பரிதாபமாக இறந்தார்