மாவட்ட செய்திகள்

விபத்தில் கூலி தொழிலாளி பரிதாபமாக இறந்தார் + "||" + Car crash kills worker

விபத்தில் கூலி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்

விபத்தில் கூலி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்
கொட்டாம்பட்டி அருகே சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் கூலி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்
கொட்டாம்பட்டி
சிவகங்கை மாவட்டம் நெற்குப்பை அருகே உள்ள நீலமேகம்பட்டியை சேர்ந்தவர் மச்சக்காளை. இவருடைய மகன் பழனியப்பன் (வயது 50). சைக்கிளில் சென்று பழைய பிளாஸ்டிக் பொருட்கள், பாட்டில்கள் சேகரிக்கும் வேலை செய்து வருகிறார் இந்தநிலையில் நேற்று கொட்டாம்பட்டியில் இருந்து பள்ளபட்டிக்கு நான்கு வழி சாலையில் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது  மதுரையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற கார் சைக்கிள் மீது மோதியதில் தூக்கிவீசப்பட்ட கூலி தொழிலாளி பழனியப்பன் சம்பவ இடத்திலேயே பறிதாபமாக உயிருழந்தார். விபத்து குறித்து தகவல் அறிந்த கொட்டாம்பட்டி போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  மேலும் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து கார் டிரைவர் அருப்புக்கோட்டையை சேர்ந்த பிரசன்னபாலாஜி(28)  என்பரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. வாகனம் மோதி அ.தி.மு.க. பிரமுகர் சாவு
வாகனம் மோதி அ.தி.மு.க. பிரமுகர் பரிதாபமாக இறந்தார்
2. மராட்டியத்தில் மேலும் 55 ஆயிரம் பேருக்கு கொரோனா; 297 பேர் பலி
மராட்டியத்தில் மேலும் 55 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. 297 பேர் உயிரிழந்தனர். தாராவியில் 62 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
3. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1 லட்சத்துக்கு கீழே வந்தது, ஒரு நாள் கொரோனா பாதிப்பு
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 1 லட்சத்துக்கு கீழே வந்தது. பலியும் சற்றே குறைந்துள்ளது.
4. கீரனூர் அருகே கார் மோதி மெக்கானிக் பலி
கார் மோதி மெக்கானிக் பலியானார்.
5. இந்தோனேசியாவில் கனமழை வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 44 பேர் சாவு
இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் உள்ள நுசா தெங்கரா மாகாணத்தில் நேற்று முன்தினம் இரவு தொடங்கி விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்தது.