மாவட்ட செய்திகள்

சொந்த ஊருக்கு வாக்களிக்க வந்த பெயிண்டர் மர்ம மரணம் + "||" + The mysterious death of the painter who came to vote for his hometown

சொந்த ஊருக்கு வாக்களிக்க வந்த பெயிண்டர் மர்ம மரணம்

சொந்த ஊருக்கு வாக்களிக்க வந்த பெயிண்டர் மர்ம மரணம்
சொந்த ஊருக்கு வாக்களிக்க வந்த் பெயிண்டர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்
திருமங்கலம்
சொந்த ஊருக்கு வாக்களிக்க வந்த் பெயிண்டர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
பெயிண்டர்
திருமங்கலம்- ராஜபாளையம் சாலையில் பழைய நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்திற்கு பின்புறம் ஒரு வாலிபர் பிணமாக கிடப்பதாக திருமங்கலம் நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். 
மேலும் இறந்து கிடந்த வாலிபர் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விசாரணையில் விருதுநகர் ரோசல்பட்டியை சேர்ந்த சங்கர் ராஜா(வயது 38) என்பது தெரியவந்தது. இவர் கோவையில் பெயிண்டராக வேலை பார்த்து வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு சட்டமன்ற தேர்தலையொட்டி வாக்களிப்பதற்காக கோவையில் இருந்து சொந்த ஊருக்கு புறப்பட்டு வந்தார். 
விசாரணை
ஆனால் அவர் வீட்டுக்கு வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் சங்கர்ராஜாவை தேடினர். இந்தநிலையில் தான் அவர் பிணமாக மீட்கப்பட்டுள்ளார். அவர் விஷம்குடித்து தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு யாரும் அவரை அடித்து ெகாலை செய்து விட்டு பிணத்தை வீசி சென்றனரா என தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.