45 வயதுக்கு மேற்பட்டோர் கொரோனா தடுப்பூசி போட வேண்டும்


45 வயதுக்கு மேற்பட்டோர் கொரோனா தடுப்பூசி போட வேண்டும்
x
தினத்தந்தி 7 April 2021 7:08 PM GMT (Updated: 7 April 2021 7:17 PM GMT)

பரவலை கட்டுப்படுத்த 45 வயதுக்கு மேற்பட்டோர் கொரோனா தடுப்பூசி போட வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

கோவை,

கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. நாள் ஒன்றுக்கு 250-க்கும் மேற்பட்ட நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். 

இவர்களுக்கு கோவை அரசு மருத்துவமனை, இ.எஸ்.ஐ. மற்றும் ஊரக பகுதிகளில் உள்ள கொரோனா சிகிச்சை மையங்கள், தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. 

மேலும் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில்தான் 75 சதவீதத்திற்கும் மேற்பட்ட நபர்கள் கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்படுகிறார்கள்.
பாரதியார் மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தில் கொரோனா சிகிச்சை மையம் உருவாக்கப்பட்டு 700 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன.

 கோவை மாநகராட்சி சார்பாக கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘‘கொரோனா நோய் தடுப்பூசியை பொதுமக்கள் அனைவரும் போட்டுக்கொள்வது அவசியமானதாகும். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் சர்க்கரை, ரத்த அழுத்தம் போன்ற இணை நோய்கள் உள்ள 45 வயதுக்கும் மேற்பட்டவர்கள்

 இந்த தடுப்பூசியை போட்டுக்கொள்வது மிகவும் அவசியமானதாகும். அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் கொரோனா தடுப்பூசியானது இலவசமாக பொதுமக்களுக்கு போடப்பட்டு வருகிறது.

பொதுமக்கள் இதில் தனிகவனம் செலுத்தி, கொரோனா நோய் தொற்றிலிருந்து தங்களையும், தங்களது குடும்பத்தையும் பாதுகாக்கும் வண்ணம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். 

இவ்வாறு தடுப்பூசி போட்டுக்கொள்வதால் சுமார் 40 சதவீதம் வரை மாநகராட்சி பகுதிகளில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியும்’’. இவ்வாறு சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story