மாவட்ட செய்திகள்

திருச்சி மாவட்டத்தில் கொரோனாவுக்கு முதியவர் பலி + "||" + Elderly man dies in Corona in Trichy district

திருச்சி மாவட்டத்தில் கொரோனாவுக்கு முதியவர் பலி

திருச்சி மாவட்டத்தில் கொரோனாவுக்கு முதியவர் பலி
திருச்சி மாவட்டத்தில் கொரோனாவுக்கு முதியவர் பலியானார். புதிதாக 90 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
திருச்சி, 
திருச்சி மாவட்டத்தில் நேற்று 90 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 16 ஆயிரத்து 430 ஆக உயர்ந்து உள்ளது. தற்போது 855 பேர் சிகிச்சையில் உள்ளனர். திருச்சி அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் இருந்து நேற்று 44 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். அதேநேரம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 71 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 187 ஆக உயர்ந்துள்ளது.