மாவட்ட செய்திகள்

பயிற்சி முகாம் + "||" + Training camp

பயிற்சி முகாம்

பயிற்சி முகாம்
கால்நடை வளர்ப்பு குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது.
காரியாபட்டி, 
திருச்சுழி ஆர்.சி.பி.டி.எஸ். தொண்டு நிறுவனம் சார்பில் திட்ட இயக்குனர் எட்வின் பொன்னரசன், திட்ட அலுவலர் நிர்மல்ராஜா ஆகியோர் வழிகாட்டுதலின் படி குண்டுகுளம் பகுதியில் கால்நடை வளர்ப்பு குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது. முகாமில் திருச்சுழி கால்நடை மருத்துவர் கனகராஜ்  கலந்து கொண்டு கால்நடை வளர்ப்பு மற்றும் பராமரிப்பு மூலம் தொழில் வளத்தை பெருக்குதல், ஆடு, மாடு, கோழி போன்ற கால்நடைகள் மூலம் வருமானத்தை அதிகரிக்க செய்தல் என்பன குறித்து பயிற்சி முகாமில் விளக்கிக் கூறினார். மேலும் இந்தமுகாமில் ஆர்.சி.பி.டி.எஸ். அலுவலக திட்ட ஒருங்கிணைப்பாளர் செல்லத்துரை, சி.எம்.சி.ஜே. அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளர் பால்தாமஸ், களப்பணி ஒருங்கிணைப்பாளர்கள் வெங்கட்ராமன், ஹரி கிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு கால்நடை வளர்ப்பு மற்றும் பராமரிப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

தொடர்புடைய செய்திகள்

1. பயிற்சி முகாம்
ஆலங்குளத்தில் தொழிலாளர் நல வாரிய உறுப்பினர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது.
2. வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி முகாம்
சிவகிரியில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி முகாம் நடந்தது.
3. தொழில் முனைவோர் பயிற்சி முகாம்
விருதுநகரில் கல்லூரி மாணவர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது.
4. பயிற்சி முகாம்
பயிற்சி முகாம்
5. பயிற்சி முகாம்
பயிற்சி முகாம்