மாவட்ட செய்திகள்

திருச்சியில் போலீஸ் ஜீப் மோதி பிளஸ்-2 மாணவர் பலி + "||" + Police jeep collides with Plus-2 student in Trichy

திருச்சியில் போலீஸ் ஜீப் மோதி பிளஸ்-2 மாணவர் பலி

திருச்சியில் போலீஸ் ஜீப் மோதி பிளஸ்-2 மாணவர் பலி
திருச்சியில் போலீஸ் ஜீப் மோதி பிளஸ்-2 மாணவர் பலியானார்.
கே.கே.நகர்,

திருச்சி கிராப்பட்டி காலனியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் மோகனின் மகன் வினோத் (வயது 17). பிளஸ்-2 படித்து வந்தார். நேற்று இரவு இவர் மோட்டார் சைக்கிளில் கிராப்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இருந்து வெளியே வந்த போலீஸ் ஜீப் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் வினோத் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். 

இதுபற்றி தகவல் அறிந்த எடமலைப்பட்டிபுதூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். பின்னர் வினோத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.